Take a fresh look at your lifestyle.

மெல்லிசை திரைவிமர்சனம்

13

மெல்லிசை திரைவிமர்சனம்

திரவ் இயக்கத்தில் கிஷோர், சுபத்ரா, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மெல்லிசை.

கதை

கிஷோரின் மகன் வீட்டை ஹரிஷ் உத்தமனிடம் அடமானம் வைத்து வாங்கிய கடனை அடைக்காததால் வீட்டை தன் பெயருக்கு மாற்றி தர சொல்கிறார். கால அவகாசம் கேட்கிறார் கிஷோர் மகன், கொடுக்க மறுக்கிறார் ஹரிஷ் உத்தமன்.
கிஷோர் மகன் மகள் பாயிண்ட் ஆப் வியூவிலிருந்து வீட்டிற்கான கதை துவங்குகிறது. P.T வாத்தியாராக இருக்கும் கிஷோர் மனைவி மகன் மற்றும் மகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். P.T வாத்தியாராக இருந்தாலும் நன்றாக பாடும் திறமையுள்ளவர் கிஷோர். அவர் திறமையை தெரிந்து கொணட மகள் டிவி சேனல்களில் பாடும்படி வற்புறுத்துகிறார். மகளின் ஆசைக்கிணங்க டிவியில் பாடி முன்னேற முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்குப் பின்னாலுள்ள வாழ்வும் வலியும் வலிமையும் தான் படத்தின் கதைக். முடிவில் ஹரிஷ் உத்தமன் வீட்டை மீட்க கால அவகாசம் கொடுத்தாரா? இல்லையா? என்பதற்கெல்லாம் விடை சொல்வதே படத்தின் மீதிக்கதை.

செல்ல அப்பாவாக, நல்ல கணவனாக, நட்பு நிறைந்த ஆசானாக, ரசனை மிகுந்த கலைஞனாக கிஷோர் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அவருக்கு மனைவியாக சுபத்ரா சிறப்பாக நடித்துள்ளார்.
ஹரிஷ் உத்தமன், ஜாஸ்வன்ட், தனன்யா, கிஷோரின் மகன், மகள் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
தேவராஜ் புகழேந்தி யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ஷங்கர் ரங்கராஜனின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குநர் திரவ் எல்லோரும் ரசிக்கும்படியான அழகான குடும்பக்கதையை சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.

மெவ்விசை குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.