Take a fresh look at your lifestyle.

கருப்பு பல்சர் திரைவிமர்சனம்

6

முரளி கிரிஷ் எஸ். இயக்கத்தில் தினேஷ், ரேஷ்மா வெங்கடேசன், மன்சூரலிகான், அர்ஜை மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கருப்பு பல்சர்.

கதை

மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் அர்ஜைக்கு அடிக்கடி ஒரு பல்சர் விபத்தாகி ஜல்லிக்கட்டு காளை மோதும் கனவு வந்து துன்புறுத்துகிறது. இந்த சூழ்நிலையில்
தன் வசமிருக்கும் கருப்பு நிற பல்சரை தன்னிடம் பைனான்ஸ் வாங்கும் தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலி கானிடம் கொடுத்து சென்னைக்கு கொண்டுபோகச் சொல்கிறார். அந்த கருப்பு பல்சரை தன் மகன் எடுத்துச் சென்று விப்த்து ஏற்படுகிறது.
இப்படியிருக்க… வாட்டர் ஃபில்டர் கம்பெனியில் வேலை செய்யும் நாயகன் தினேஷை தன் தொழில் எதிரியாகக் கருதும் மன்சூரலிகான் தினேஷை கொல்ல திட்டமிடுகிறார்.
இந்த சூழ்நிலையில் காதலியிடம் கருப்பு பல்சர் வைத்திருப்பதாக தினேஷ் பொய் சொல்லிவிடுகிறார். கருப்பு பல்சரை வாங்க அலைகிறார். மன்சூரவிகானிடம் இருப்பது தெரிந்து அதை வாங்கி தன் காதலியுடன் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது.
அந்த பல்சர் யார் கைக்கு கிடைத்தாலும் அதில் ஆணும், பெண்ணும் ஜோடியாக சென்றால் விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்ற உண்மையும் தெரிய வருகிறது.
இந்த விபத்து எதனால் ஏற்படுகிறது என்ற காரணத்தை தினேஷ் கண்டுபிடித்தாரா? அர்ஜை கனவில் வந்த காளைக்கும், பல்சருக்கும் என்ன.சம்பந்தம் என்பதெல்லாம் விடை சொல்வதே படத்தின் மீதிக் கதை.

தினேஷ் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார். கதநாயகியாக ரேஷ்மா கோடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அர்ஜை வில்லனாக மிரட்டியுள்ளார்.
காமெடி வில்லனாக மன்சூர் அலிகான் சிறப்பாக நடித்துள்ளார். மதுநிகா, சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி , பிராங்க்ஸ்டர் ராகுல் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இன்பாவின் இசையும், பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலம்.

வழக்கமான கதையை புதுமையான காட்சிகள் மூலம் எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர் முரளி கிரிஷ் எஸ். பாராட்டுக்கள்.