லைகா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சுபாஸ்கரன் தயாரிப்பில்
ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம் லாக்டவுன்.
கதை
சார்லி நிரோஷா கணவன் மனைவி. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பெண்தான் கதையின் நாயகி அனுபமா பரமேஸ்வரன். படித்து முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் அழகை கண்டு நிறைய பேர் லவ் புரபோஸ் செய்கிறார்கள். தாய் தந்தைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக்கூடாது என யார் காதலையும் ஏற்காமல் வேலைக்கான முயற்சியில் இருக்கும்போது தோழி ஒருத்தியிடம் வேலைக்கு ரெக்கமண்ட் பண்ண சொல்ல அவள் ஐடி வேலையில் இருக்கும் ஆண் நண்பரிடம் சிபாரி செய்ய அவரோ அடுத்த மாதத்திற்குள் வேலை வாங்கித்தருவதாக சொல்கிறார். அந்த சமயம் பார்ட்டி நடக்க அந்த ஆண் நண்பரின் வற்புறுத்தலால் சரக்கு அடித்து போதை தலைக்கேறி
ரூமில் படுக்க வைக்கிறார்கள். சில நாட்கள் கழித்து உடல்நலம் சரியில்லாததால் டாக்டரை சென்று பார்க்க கராப்பம் என தெரிந்து ஷாக் ஆகிறாள் அனுபமா. அப்பா அம்மாவுக்கு தெரிந்தால் தற்கோலை செய்து கொள்வார்கள் என பயந்து கர்ப்பத்துக்கு காரணமானவனை கண்டுபிடிக்காமல் தன் வயிற்றில் உள்ள கர்ப்பத்தை கலைக்க முயல்கிறாள். இந்த சூழ்நிலையில் லாக்டவுனும் வந்துவிட அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை கலைத்தாளா? இல்லையா? அதற்காக என்னவெல்லாம் கஷ்டப்பட்டால்? உயிர் பிழைத்தாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அனுபமா பரமைஸ்வரன் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
தந்தையாக சார்லியும் தாயாக நிரோஷாவும் சிறப்பாக நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன் நடிப்பும் அருமை.
இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன், விநாயக ராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
கே.ஏ. சக்திவேலின் ஒளிப்பதிவு அருமை. வி.ஜே. சாபு ஜோசப்பின் எடிட்டிங் ஷார்ப். என்.ஆர்.ரகுநந்தன் & சித்தார்த் விபின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
COVID-19 காலத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை கதையை எடுத்துக்கொண்டு
அதை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் AR ஜீவா. பாராட்டுக்கள்.