“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.

சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..,

தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது..,
இது எங்கள் குடும்ப விழா. எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷன் ஒரு ஹீரோவாக வேண்டும் என அவர் அதிகம் ஆசைப்பட்டார். அவரது சகோதரர்கள் சேர்ந்து அஷ்டகர்மா வெற்றிப்படத்தைத் தந்தனர். இப்போது ரஜினி கேங் படத்தைத் தந்துள்ளார்கள். சின்ன பட்ஜெட்டில் அழகாக எடுத்துள்ளார்கள். அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசியதாவது..,
எத்தனையோ பேர் ஆசைப்படும் இந்த திரைத்துறையில் கிஷன் அவர்கள் போராடி ஹீரோவாக நடித்துள்ளார். முதல் சந்திப்பில் இயக்குநர் பற்றியும், கதையைப் பற்றியும் அவ்வளவு ஆவலோடு பேசினார். MISHRI ENTERPRISES பல படங்கள் வெளியாக உதவியாக இருக்கிறது. இது அவர்களது படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்றைய நிலையில் படம் வெளியிடுவது பெரும் சிக்கலாக உள்ளது. நல்ல கண்டன்ட் உள்ள படம் கண்டிப்பாக ஜெயிக்கும். நல்ல கதை உள்ள இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.

பாடகர் அந்தோணி தாசன் பேசியதாவது..,
எனக்கு இப்படத்தில் பாட வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் ரஜினி கிஷன் இப்படத்தில் எல்லா துறையிலும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார் அவர் பெரிதாக வெற்றி பெற வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் அஜய் பேசியதாவது..,
MISHRI ENTERPRISES தயாரிப்பாளர் நடிகர் ரஜினி கிஷனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ரஜினி என்னும் பெயருக்குத் தனி மவுசு இருக்கிறது. ரஜினி கேங் எனும் பெயர் கண்டிப்பாக ஜெயிக்கும். நல்ல கண்டன்ட் எப்போதும் ஜெயிக்கும், இதை நான் உறுதியாகச் சொல்கிறேன். இயக்குநர் ரமேஷ் பாரதி உடன் நான் வேலை பார்த்துள்ளேன். அவர் உருவாக்கித் தந்த ஒரு வெப் சீரிஸ் பார்த்து, பலர் எனக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தார்கள். அவர் மிகத் திறமையானவர். அடுத்ததாக ஜோன்ஸ் அவர் சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அவர் கண்டிப்பாக இதில் கலக்குவார். இந்தக்குழு என்னுடைய கேங், இதில் இருக்கும் அனைவரும் ஜெயிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

ஸ்டண்ட் இயக்குநர் ராஜேஷ் பேசியதாவது..,
தயாரிப்பாளர் நடிகர் ரஜினி கிஷன் சார் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆக்சன் ஹீரோ போல இதில் கடுமையாக உழைத்துள்ளார். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் குழுவினருக்கு நன்றி. படத்தைப் பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள்.

பாடகி தீப்தி சுரேஷ் பேசியதாவது…,
ரஜினி கேங் குழுவில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ஜோன்ஸ் உடன் 10 வருடமாக வேலை பார்க்கிறேன். அவர் இசையில் பாடியது மகிழ்ச்சி. அவருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

பாடலாசிரியர் நவீன் பாரதி பேசியதாவது..,
இப்படத்தில் நான் ஒரு பாடல் எழுதியுள்ளேன். வாய்ப்பு தந்த ஜோன்ஸ் அண்ணா, ரஜினி கிஷன் சார் இயக்குநர் எல்லோருக்கும் நன்றி. ஜோன்ஸ் அண்ணா தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தந்து வருகிறார். எல்லோருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட் பேசியதாவது..,
ஒரு அழகான படைப்பை எனக்குத் தந்ததற்கு இந்த டீமுக்கு பெரிய நன்றி. ரமேஷ் பாரதி அண்ணா நாம் டீமாக ஒரு படம் செய்கிறோம் என எல்லோருக்கும் வாய்ப்பு தந்தார். இவர்களுடன் வேலை பார்த்தது மிகச் சந்தோசமான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் பாடிய, பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

நடிகர் முனிஷ்காந்த் பேசியதாவது..,

இயக்குநர் ஹார்ட் ஒர்க் இல்லை பேய் ஒர்க் செய்வார், என்னிடம் சில நாட்கள் மட்டும் தான் கேட்டார் அதற்குள் எப்படி எடுப்பீர்கள் என்றேன். காலையில் ஆரம்பித்து இரவு வரை அசராமல் உழைத்தார். அவரிடம் கொஞ்சம் கூட அசதியே இல்லை. மொத்தக் குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தில் மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். இது ஒரு அருமையான எண்டர்டெயினராக இருக்கும். படத்தின் இசையமைப்பாளர் ஜோன்ஸ் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
கோப்ரா பிரதீப்குமார் பேசியதாவது..,
நான் சின்னத்திரை நடிகராக சரவணன் மீனாட்சியில் அறிமுகம் ஆனேன். ரமேஷ் பாரதி அண்ணன் இயக்கிய கனா காணும் காலங்கள் சீரிஸில் நடித்தேன். அங்கு அவரிடம் கிடைத்த அறிமுகம் தான் இங்கு படம் வரை வந்துள்ளது. எங்களைப் போலக் கலைஞர்களை உங்கள் வாழ்த்து தான் வளர்ந்து விடும். உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் கோபி பேசியதாவது..,
ரஜினி கேங் படத்தின் இயக்குநர் ரமேஷ் பாரதி அவர்கள் எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தந்து வருகிறார். கனா காணும் காலங்கள் தொடரில், ஹோட்டல் மாஸ்டராக நடித்தேன். மாஸ்டர் போல எல்லலோருக்கும் பாரதி அண்ணன் வாய்ப்பு தருகிறார். ரஜினி கேங் படம் மிகப்பெரிய வெற்றிபெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது..,
ரஜினி கேங் படத்தில் நான் இரண்டாவது நாயகன் எனக் கூறி தான் இயக்குநர் ரமேஷ் பாரதி அண்ணன் நடிக்க வைத்தார். கனா காணும் காலங்கள் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த குழுவிற்கு நன்றி. எனக்கு இந்த வாய்ப்பைத் தந்த ரஜினி கிஷன் அவர்களுக்கு நன்றி. எனக்கு பாட்டு ஃபைட் எல்லாம் இருக்கிறது. படப்பிடிப்பில் ரஜினி கிஷன் பெரும் உதவியாக இருந்தார். ஹீரோயின் மிக அழகாக நடித்துள்ளார் அவரும் எனக்கு உதவியாக இருந்தார். இசையமைப்பாளர் மிக அருமையான இசையைத் தந்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நாயகி திவிகா பேசியதாவது..,
ரஜினி கேங் மன நிறைவான மனதுக்கு நெருக்கமான படம். மொழி கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் என் திறமையைப் பார்த்து எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் ரமேஷ் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் எல்லோரும் என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ரஜினி கிஷன் எனக்கு மிக உதவியாக இருந்தார். எங்கள் இருவருக்கும் நிறையச் சந்தேகம் இருந்தது. திரைக்கதை அப்படி, நாங்கள் காட்சியை எங்களுக்குள் விவாதித்து நடித்தோம். இசையமைப்பாளர் ஜோன்ஸ் அற்புதமான பாடல்கள் தந்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் அண்ணன், கூல் சுரேஷ், முனீஷ்காந்த் அண்ணன் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். எனக்கு நிறையச் சொல்லித்தந்தார்கள். படக்குழுவில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எங்கள் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரஜினி கிஷன் பேசியதாவது..,
ரஜினி கேங் எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி சார் மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். முதலில் நாமே தயாரித்தும், நடிக்கவும் வேண்டுமா? என யோசித்தேன், பிறகு நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம். படத்தில் எல்லா பெரிய நடிகர்களையும் கமிட் செய்துவிட்டோம், ஆனால் எனக்கு ஹீரோயின் மட்டும் செட்டாகவில்லை. பலரை அணுகினோம் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை, இறுதியாக தான் திவிகா வந்தார். என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. முனீஷ்காந்த் என் நடிப்பைப் பாராட்டினார். ஷீட்டிங் போது கூல் சுரேஷ் வந்தார் அவருக்காக ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். 3 மணி நேரம் ஷீட்டிங் நிறுத்திவிட்டோம் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடன் நடித்த எல்லா பெரிய நடிகர்களும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஒரு பாடல் நன்றாக வந்தால் போதும் என நினைத்தேன் ஆனால் இசையமைப்பாளர் மூன்று பாடல்களும் அட்டகாசமாகத் தந்தார். ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். மேனேஜர் சந்துரு என் வேலையை எளிமையாக்கிவிட்டார். அவருக்கு நன்றி. என் அப்பா சொன்னது போல ஒரு டீமாக எல்லோரும் உழைத்து ஒரு நல்ல படைப்பை உருவாக்கியுள்ளோம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் M.ரமேஷ் பாரதி பேசியதாவது..,
ரஜினி கேங் இது எல்லோருக்குமான படம். இதில் காமெடி, ஹாரர், எமோசன் என எல்லா அம்சங்களும் உள்ளது. இசையமைப்பாளர் ஜோன்ஸ் பெரும் திறமைசாலி அவருடன் இணைந்த பிறகு வேறு யாருடனும் வேலை பார்க்கவில்லை. அற்புதமான இசையமைப்பாளர். இப்படத்தில் அட்டகாசமான பாடல் தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் சதீஷ் அவரும் அப்படித்தான், அவருடன் இணைந்த பிறகு வேறு யாருடனும் வேலை பார்க்கவில்லை. எடிட்டர் வினோத் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். எல்லோருமே ஒரு டீமாகத்தான் வேலை செய்துள்ளோம். இப்படத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க என் உதவி இயக்குநர்கள் பெரிய உறுதுணையாக இருந்தார்கள். மேனேஜர் சந்துரு சார் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்தார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என நிறைய விவாதித்தோம், அப்போது கிஷன் சார் அவர் பெயரை ரஜினி கிஷன் என மாற்றினார், அதனால் அவர் கதாபாத்திரத்திற்கும் ரஜினி எனப் பெயர் வைத்தோம். அவரது பயணமும் அவருக்கு உதவும் கேங்கும் தான் இந்தக்கதை, அதனால் ரஜினி கேங் என வைத்திவிட்டோம். ரஜினி என்றாலே பவர் என்பதால் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ரஜினி கிஷனுக்கு முதலில் இந்தப்படம் எப்படி வரும் என்ற சந்தேகம் இருந்தது. ஷீட் ஆரம்பித்த பின்னர் தான் நம்பினார். இந்தப்படத்தைச் சொன்ன நேரத்தில், சொன்ன மாதிரி முடித்துக்கொடுக்க அவர் என் மீது வைத்த முழுமையான நம்பிக்கை தான் காரணம். நிறைய ஹீரோயின் தேடி கடைசியாக திவிகா வந்தார், அவர் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார். மொட்டை ராஜேந்திரன், முனீஷ் காந்த் என எல்லா நடிகர்களும் எல்லோரும் இரவு பகல் பாராமல் நடித்துத் தந்தார்கள். கூல் சுரேஷ் எல்லாத்தையும் கச்சிதமாகச் செய்வார். ஏன் இவரை எல்லோரும் திட்டுகிறார்கள் எனத் தோன்றியது. படத்தில் நடித்த எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்தார்கள். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றிகள். இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

மறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.

பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது.

பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு: C.எஸ்.பதம்சந்த், C.அரியந்த் ராஜ் & ரஜினி கிஷென்
இயக்கம் : M. ரமேஷ் பாரதி
இசை : M.S. ஜோன்ஸ் ரூபர்ட்
எடிட்டிங் : R K . வினோத் கண்ணா
ஒளிப்பதிவு : N. S. சதீஷ்குமார்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

#Newfilm#rajini gang#Tamil movie#trailerlaunch#ungal cinema
Comments (0)
Add Comment