வெளவல்ஸ் திரைப்பட விமர்சனம்

வெளவல்ஸ் திரைப்பட விமர்சனம்

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் 5 குறும்படங்களை ஒன்றாக்கி ஒரு முழு நீளத் திரைப்படமாக வெளியாகியிருக்கும் படம்தான் வெளவல்ஸ்

கதை

1.தான் பார்த்து ரசித்த படங்களில் நடக்கும் கொலையை தானே செய்து பார்க்கும் சைக்கோ கொலைகாரன் கதை.
2. வேகமாக பைக் ஓட்டுவதால் அதனால் ஏற்படும் ஆக்ஸிடென்ட் காதல் கதை.
3. காதல் தோழ்வியால் தற்கொலை செய்துகொள்ளப்போகும் ஒருவனின் கதை
4. அன்பு செலுத்துபவர்கள் மீது சந்தேகப்படாமல் இருக்கவேண்டும் என்ற கதை.
5. உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய், என்பதை எண்ணங்களின் பிரதிபலிப்பான கனவுகள் மூலம் உணர்த்துவது?

என ஐந்து கதைகள் மூலம் காதலின் வெவ்வேறு உணர்வுகளை சொல்லியிருக்கிறார்கள் 5 இயக்குநர்கள்

யூகிசேது கதை மட்டும் சூப்பராக இருக்கு மற்றவை சுமாராக இருக்கிறது.

யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி, ஐந்து கதைகளையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு, தரம் மிக்கதாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்

திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஆளுக்கொரு கதையை எழுதி இயக்கியிருந்தாலும் யூகிசேது கதைமட்டுமே சூப்பராக இருந்தது.
ஐவருக்கும் பாராட்டுக்கள்.

Comments (0)
Add Comment