வெஞ்சென்ஸ் திரைவிமர்சனம்

ஏ.பி.அசோக்குமார் தயாரிப்பில் ராகுல் அசோக். இயக்கத்தில்
அபர்ணதி, இளவரசு, ஜான் விஜய்,காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சச்சு மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் வெஞ்சென்ஸ்.

கதை

அரசுப் பள்ளியில் படிக்கும் வேணி (அபர்ணதி), தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை பற்றி பேசாமல் இருப்பது குறித்து தன் வளர்ப்பு தந்தை காளிவெங்கட்டிடம் சொல்கிறாள். அதற்கு காளி வெங்கட் நன்றாக படித்தால் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று சொல்ல நன்றாக படித்து கலெக்டர் ஆகிறாள். மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்கும் வேணி, தனது பதவியை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். ஊழல் அதிகாரிகளை பகிரங்கமாக எச்சரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் அவர் ஒரு நாயகியாக வலம் வருகிறார். தமிழக முதலமைச்சர் வேலு (இளவரசு) மற்றும் உள்துறை அமைச்சர் மாதவ் (ஜான் விஜய்) ஆகியோருடன் வேணிக்கு அதிகார மோதல் ஏற்படுகிறது. இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஆனால், அங்கிருந்து அவர் காட்டும் விஸ்வரூபம், தேர்தல் ஆணையத்தின் நேரடி மேற்பார்வையாளர் பதவி வரை அவரை உயர்த்துகிறது. தன்னை ஒடுக்க நினைத்த அரசியல்வாதிகளை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி பணிய வைத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கலெக்டராக கதையின் நாயகியாக வேணி கதாபாத்திரத்தில் அபர்ணதி சிறப்பாக நடித்துள்ளார். முதல்வராக இளவரசு நடிப்பும் அருமை. ஜான் விஜய்,காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சச்சு, பிரியா நாயர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்நிரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
எம்.எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
கார்த்திக் ராஜா, இசை ரசிக்கவைக்கிறது.

இயக்குநர் ராகுல் அசோக் எடுத்துக்கொண்ட அரசியல் கதையை இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.

Comments (0)
Add Comment