’டியூட்’ – விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, ஆர். சரத்குமார், ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’டியூட்’ .

நாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பவர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் ஈவென்ட் ப்ளானர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு துணையாக தாய்மாமன் அமைச்சர் சரத்குமார் மகள் மமிதா பைஜு, இருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுக்கு பிரதீப் மீது காதல் வருகிறது. ஆனால், பிரதீப், மமிதா பைஜு மீது காதல் வரவில்லை. உன்னை தோழியாகத்தான் பார்க்கிறேன் என்று கூறி காதலை நிராகரித்துவிடுகிறார்.

இதனையடுத்து மமிதா மேற்படிப்பிற்காக பெங்களூர் சென்றுவிடுகிறார். 6 மாதங்கள் கடந்த நிலையில் பிரதீப்க்கு மமிதா பைஜு மீது காதல் வருகிறது. தன் காதலை பிரதீப் மமிதா அப்பா சரத்குமாரிடம் கூற இதை தொடர்ந்து திருமண ஏற்பாடு நடக்கிறது.

திருமண நாள் அன்று மமிதா பைஜு ஹிருது ஹாரூனை காதலிப்பதாக சொல்லி பிரதீப் காதலை ஏற்க மறுக்கிறார். இதனையடுத்து பிரதீப், மமிதா பைஜுவுடன் ஹிருது ஹாரூனை சேர்த்து வைக்க நினைக்கிறார்.

இறுதியில் நாயகன் பிரதீப் , மமிதா பைஜுவை காதலருடன் சேர்த்து வைத்தாரா? இல்லையா? பிரதீப் – மமிதா இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ’டியூட்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன் துறுதுறுவென இருக்கும் இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதல், காமெடி, சண்டை, செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக முன்னாள் காதலி திருமணத்தில் செய்யும் கலாட்டா சிரிக்க மற்றும் ரசிக்க முடிகிறது.

முறை பெண்ணாக நடித்திருக்கும் நாயகி மமிதா பைஜு எதிர்த்த நடிப்பின் மூலம் கவர்கிறார். பிரதீப் போடும் செல்ல சண்டை, கோபம், நடனம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமைச்சராக நடித்திருக்கும் சரத்குமார் நல்லவரா , கெட்டவரா என முடிவு செய்ய முடியாத அளவிற்கு நடிப்பபை கொடுத்திருக்கிறார்.

பிரதீப் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி, மமிதா பைஜு காதலனாக வரும் ஹிருது ஹாரூன் இயல்பான நடிப்பால் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார் . மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் அலையே அலையே பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

ஒரு பெண் , கணவன் , காதலன், இவர்களை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இத்திரைப்படத்தில் ஆணவ படுகொலை பற்றி சொல்லியிருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, ,குடும்பம் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார்.

மதிப்பீடு : 3.5 / 5

Comments (0)
Add Comment