’பைசன்’- விமர்சனம்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஷ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், அருவி மதன், அனுராக் அரோரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பைசன்’

1994 ஆம் ஆண்டு ஜப்பானில் நடக்கும் ஆசிய உலக கபடி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் இறுதிப்போட்டியுடன் படம் தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டம் உள்ள வனத்தி கிராமத்தில் வசிக்கும் விவசாயி பசுபதி இவருடைய மூத்த மகள் ரஜிஷா விஜயன், மகன் துருவ் விக்ரமுடன் வாழ்ந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே கபடி விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட துருவ் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் ஆசைப்படுகிறார்

இந்நிலையில் பள்ளி பிடி வாத்தியார் அருவி மதன் துருவ் விக்ரமின் திறமையை பார்த்து அவரை பள்ளி கபடி அணியில் சேர்த்துவிடுகிறார். ஆனால், துருவ் கபடி விளையாடுவது அவருடைய அப்பா பசுபதிக்கு பிடிக்கவில்லை. ஆனால் அக்கா ரெஜிசா விஜயன், துருவ் விக்ரமுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

இதே சமயம் இருவேறு சாதி பிரிவை சேர்ந்த அமீர் மற்றும் லால் இருவருக்கிடையே கடும் மோதல் ஏற்படுகிறது. இதில் ஒரு பிரிவினர் அமீரை தலைவராக பார்க்கிறார்கள். மற்றொரு பிரிவினர் லாலை தலைவராக கொண்டாடுகிறார்கள்.

முடிவில் துருவ் இந்திய அளவிலான விளையாட்டு அணியில் இடம் பிடித்தாரா?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துருவ் கலந்து கொண்டாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’பைசன்’

பைசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துருவ் விக்ரம் இளம் காளையாக எதிரிகளுடன் மோதும் போது துடிப்பான இளைஞராக காதல், ஏக்கம், சண்டை, எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்து கடினமான உழைப்பால் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்து உயர்ந்து நிற்கிறார்.
அமைதியான நடிப்பில் துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், பிடி ஆசிரியராக நடித்திருக்கும் அருவி மதன், இயக்குநர் அமீர், லால் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
எழில் அரசு.கே ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
கபடி விளையாட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சாதி வன்முறை சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன் அனைத்து சமூகத்தினரும் கொண்டாடும் விதமாக ஆரம்பம்முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்
ரேட்டிங் : 4.5 /5
Comments (0)
Add Comment