’மரியா’- விமர்சனம்

ஹரி கே ஹரசுதன் தயாரிப்பில் இயக்குனர் ஹரி கே. சுதன் இயக்கத்தில் சாய்ஶ்ரீ பிரபாகரன், பாவல் நவகீதன்,சித்து குமரேசன், சுதா புஷ்பா, அபிநயா, விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மரியா’

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் விடுமுறைக்காக சென்னையில் உள்ள உறவுக்கார பெண் வீட்டிற்கு வருகிறார். உறவுக்கார பெண் அவரது தோழியியுடன் சேர்த்து இரண்டு ஆண் நணப்ர்களுடன் ஒவ்வொரு ஜோடியும் லிவிங் டுகெதர் முறையில் திருமணம் செய்யாமல் ஜோடியாக ஒன்றாக வசிக்கிறார்கள்.

இதனையடுத்து நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் சில நாட்கள் அங்கு தங்குகிறார். இந்நிலையில் உறவுக்கார பெண்ணின் ஆண் நண்பரோடு நெருங்க நினைக்கையில் இது தவறு என்று புரிந்து கொண்டு ஊரில் இருக்கும் அம்மாவை பார்க்க செல்கிறார்.

அங்கு அவரது அம்மாவிடம் கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசையை கூறுகிறார் இதை கேட்ட அவரது அம்மா நாயகியை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

இறுதியில் நாயகி சாய்ஶ்ரீ மீண்டும் கன்னியாஸ்திரி வாழ்க்கையை தொடர்ந்தாரா? இல்லையா? திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா? என்பதே ’மரியா’ படத்தின் மீதிக்கதை.

கன்னியாஸ்திரியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு பார்வையாலே உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிறித்துவ மதத்திற்கு எதிராக  வழிபாடு செய்யும் குழுவின் தலைவராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், படம் முழுவதும் இயல்பான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார்.
நாயகியின் உறவுக்கார பெண்ணாக நடித்திருக்கும் சிது குமரேசன், அவரது காதலராக நடித்திருக்கும் விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவருமே கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் ஆகியோரது இசையில் பாடல் மற்றும்   பின்னணி இசை உயிரோட்டமாக உள்ளது. 
மணிஷங்கர்.ஜி ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
கிறிஸ்துவ கன்னியாஸ்திரியை மைய கருவாக வைத்து இயல்பான  ஒரு பெண்ணின் வாழ்க்கையில்  அவரது ஆசை ,உணர்வுகளை அடக்கி வைப்பதால் எத்தகைய விளைவுகள் ஏற்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்வதுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி கே. சுதன் 
ரேட்டிங் : 2.5 / 5
Comments (0)
Add Comment