அங்கீகாரம் திரைவிமர்சனம்

அங்கீகாரம் திரைவிமர்சனம்

ஜே.பி.தென்பாதியான் இயக்கத்தில் கேஜேஆர், சிந்தூரி,
விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் அங்கீகாரம்.

கதை

சென்னையில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ளார் அத்லெட் வீரரான நாயகன் KJR. அவரின் அம்மா தூய்மைப் பணியாளர். தங்கை வழக்கறிஞர் ட்ரைனிங்கில் இருப்பவர். ஹீரோ KJR அத்லெட்டில் ஜெயித்தால் மட்டும் தன் குடும்பம் மீளும் என்ற நிலைமை. ஆனால் அதிகார மையமும், சாதிய அடக்குமுறையும் KJR-ஐ காமன்வெல்த்தில் கலந்துகொள்ள விடாமல் சூழ்ச்சி செய்கிறது..அந்த சூழ்ச்சிக்கு எதிராக நீதிமன்ற படியேறுகிறார் ஹீரோ! அவருக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை

KJR கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். புதுமுகமா என்று கேட்குமளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். சிறந்த எதிர்காலம் இருக்கு.கைஜேஆர் அம்மாவாக ரமா நடிப்பும் அருமை.சிந்தூரி,
விஜி வெங்கடேஷ், ரங்கராஜ பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் என இதில் நடித்த எல்லாக் கேரக்டர்களும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் பிண்ணனி இசை கதையோட்டத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் தனது சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

ஏழ்மை குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞன் திறமை இருந்தும் தனக்கான அங்கீகாரத்தைப் பெற எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதை சமரசமின்றிசுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் தென்பதியன். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5

Comments (0)
Add Comment