ஹரி கே ஹரசுதன் தயாரிப்பில் இயக்குனர் ஹரி கே. சுதன் இயக்கத்தில் சாய்ஶ்ரீ பிரபாகரன், பாவல் நவகீதன்,சித்து குமரேசன், சுதா புஷ்பா, அபிநயா, விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மரியா’
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் விடுமுறைக்காக சென்னையில் உள்ள உறவுக்கார பெண் வீட்டிற்கு வருகிறார். உறவுக்கார பெண் அவரது தோழியியுடன் சேர்த்து இரண்டு ஆண் நணப்ர்களுடன் ஒவ்வொரு ஜோடியும் லிவிங் டுகெதர் முறையில் திருமணம் செய்யாமல் ஜோடியாக ஒன்றாக வசிக்கிறார்கள்.
இதனையடுத்து நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் சில நாட்கள் அங்கு தங்குகிறார். இந்நிலையில் உறவுக்கார பெண்ணின் ஆண் நண்பரோடு நெருங்க நினைக்கையில் இது தவறு என்று புரிந்து கொண்டு ஊரில் இருக்கும் அம்மாவை பார்க்க செல்கிறார்.
அங்கு அவரது அம்மாவிடம் கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசையை கூறுகிறார் இதை கேட்ட அவரது அம்மா நாயகியை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.
இறுதியில் நாயகி சாய்ஶ்ரீ மீண்டும் கன்னியாஸ்திரி வாழ்க்கையை தொடர்ந்தாரா? இல்லையா? திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா? என்பதே ’மரியா’ படத்தின் மீதிக்கதை.
கன்னியாஸ்திரியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு பார்வையாலே உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.