டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார்ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குனர் தனுஷ் இயக்கத்தில் தனுஷ் ,நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி,ஆடுகளம் நரேன்,ஷாலினி பாண்டே, கீதா கைலாசம், இளவரசு, வடிவுக்கரசி, பிரிகிடா சகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’இட்லி கடை’ .
சங்கராபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜ்கிரண் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா கைலாசம் இவர்களுடைய மகன் தனுஷுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சிவநேசன் இட்லி கடை என்றால் அந்த சுற்று வட்டாரத்தில் பிரபலம் தனக்கு பிறகு அந்த கடையை மகன் தனுஷ் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ்கிரண் ஆசைப்படுகிறார் .
இதனையடுத்து தனுஷ் கேட்டரிங் படித்து பாங்காக்கில் தொழிலதிபரான சத்யராஜ் நடத்தும் ஹோட்டலில் வேலை பார்க்கிறார். சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேயைக் காதலிக்கிறார்.தனுஷின் நேர்மை உழைப்பைப் பார்த்து சத்யராஜும் சம்மதிக்கிறார்.ஆனால் சத்யராஜின் மகன் அருண் விஜய்க்கு இதில் விருப்பமில்லை.
இந்நிலையில் தனுஷ் – ஷாலினி பாண்டே இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அப்பா ராஜ்கிரண் இறந்து விட தனுஷ் ஊருக்கு செல்கிறார்.
அப்பா அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே தனது அம்மாவையும் இழந்துவிடுகிறார் தனுஷ்.
தனுஷின் பெற்றோர்களை பார்த்துக் கொண்ட பள்ளி தோழியான நித்யா மேனன் தனுஷுக்கு உதவியாக இருக்கிறார்.
அப்பா வாழ்ந்த வீட்டையும் இட்லி கடையையும் விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே இருக்க நினைத்து ஷாலினி பாண்டேவுடனான திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுகிறார்
இதனையடுத்து தனுஷை பாங்காக்கிற்கு அழைத்து செல்ல அருண் விஜய் வருகிறார்.
முடிவில் தனுஷ் ராஜ்கிரணின் இட்லி கடையை எடுத்து நடத்தினாரா? தனுஷுக்கு ஷாலினி பாண்டேவுடன் திருமண நடந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’இட்லி கடை’
முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு காட்சிகளிலும் அனைவரது பாராட்டுடன் தன் திறமையை மீண்டும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
கிராமத்து பெண்ணாக வரும் நித்யா மேனன் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண்விஜய் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.
சிவநேசன் கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் படத்திற்கு திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.
ராஜ்கிரண் மனைவியாக வரும் கீதா கைலாசம், தொழிலதிபவராக வரும் சத்யராஜ், ஷாலினி பாண்டே, இளவரசு , சமுத்திரக்கனி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது . பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
இயல்பான வாழ்வியலுடன் அழகான கிராமத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து அழுத்தமான திரைக்கதை அமைப்பில் எதார்த்தமான கிராமத்து உணர்வுகளுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தனுஷ்