அந்தரன் திரைவிமர்சனம்

MK சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், சாம்பசிவம், இவானா, வருண் ஆதிரன், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் அந்தரன்.

கதை

கதாநாயகி இவானா காதலிக்கும் காதலனை தன் அப்பா சாம்பசிவத்திற்கு பிடிக்கவில்லை. பிடிவாதமாக அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல ஒரு சில நாட்களில் காதலன் கொலை செய்யப்படுகிறார். தன் அப்பாதான் கொலை செய்திருப்பார் என்று போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் தன் அப்பா தன் கொலை செய்யவில்லை என்று தெரிய வர இரண்டாவது இவானா இரண்டாவது திருமணம் தன் அத்தை பையனுடன் ஏற்பாடு நடக்க அவரும் கொலை செய்யப்பட அடுத்து ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட அவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். தொடர்ந்து கதாநாயகி இவானாவை திருமணம் செய்யும் நபர்களை யார் கோலை செய்கிறார்கள்? எதற்காக கொலை செய்கிறார்கள்? எனாறு போலிஸ் அதிகாரியான பிரஜன் கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக போலிஸ் அதிகாரியாக பிரஜன் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநியகியாக இவானா கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இவானா அப்பாவாக தயாரிப்பாளர் சாம்பசிவம் சிறப்பாக நடித்துள்ளார். ஆதிரன், அனுபமா குமார் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் ஹரியின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் எடுத்துக்கொண்ட காதல் கதையை சஸ்பென்ஸ் திரில்லருடன் எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.

Comments (0)
Add Comment