’உசுரே’ – விமர்சனம்

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் மவுலி எம் ராதாகிருஷ்ணா தயாரிப்பில் இயக்குனர் நவீன் டி கோபால் இயக்கத்தில் டீஜெ அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர், தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’உசுரே’

தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வரும் நாயகி ஜனனியை டீஜே காதலிக்கிறார். முதலில் அவரது காதலை ஏற்க மறுக்கும் ஜனனி பிறகு அவரது காதலின் தீவிரத்தைப் பார்த்து அவரும் டீஜேவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா முட்டுக்கட்டை போடுகிறார் .

மந்த்ராவின் திட்டப்படி ஜனனி காணாமல் போகிறார் . 

முடிவில் டீஜே அருணாசலமும் ,ஜனனியும் இல் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான்  ‘உசுரே’.
’அசுரன்’ படத்தில்  நடித்த டீஜே, அருணாசலம் துடி துடிப்புள்ள இளைஞராக காதல் நாயகனாக உருகி உருகி காதலிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார் . 
நாயகியாக நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம் அழகான ஜனனி சரியான தேர்வு .
நாயகன் அப்பா – அம்மாவாக வரும்  கிரேன் மனோகர், செந்தி குமாரி, .நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள், மற்றும்பின்னணி இசை கதைக்கு பக்க பலமாக இருக்கிறது. 
மார்க்கி சாய் ஒளிப்பதிவு தரம்
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் நவீன் டி கோபால் இத்திரைப்படத்தின் முதல் பாதி மெதுவாக செல்ல இரண்டாம் விறுவிறுப்பாக செல்கிறது. இறுதிக் காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் – 3 / 5
Comments (0)
Add Comment