ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் மவுலி எம் ராதாகிருஷ்ணா தயாரிப்பில் இயக்குனர் நவீன் டி கோபால் இயக்கத்தில் டீஜெ அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர், தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’உசுரே’
தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வரும் நாயகி ஜனனியை டீஜே காதலிக்கிறார். முதலில் அவரது காதலை ஏற்க மறுக்கும் ஜனனி பிறகு அவரது காதலின் தீவிரத்தைப் பார்த்து அவரும் டீஜேவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா முட்டுக்கட்டை போடுகிறார் .
மந்த்ராவின் திட்டப்படி ஜனனி காணாமல் போகிறார் .