விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், தேவ் நாயர், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் வரும் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகி இருக்கும் “ப்ரீடம்”
1990 காலகட்டத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் நாயகி லிஜோ மோல் 8 மாதங்களுக்குப் பிறகு இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகுமார் மனைவி லிஜோ மோலை பார்ப்பதற்காக ராமேஸ்வரம் வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தற்கொலைப்படைத் தாக்குதலில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இருந்து சசிகுமார் உட்பட 45 பேரை வேலூர் கோட்டைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அங்கு சிறப்பு சிறை ஒன்றை உருவாக்கி அனைவரையும் கொடுமைப்படுத்தி வருகிறார் ஜெயில் அதிகாரியான தேவ் நாயர் இந்நிலையில் கைதியாக இருக்கும் வாய் பேச முடியாத மணிகண்டன் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஜெயில் அதிகாரியான தேவ் நாயரின் வெறித்தனமான செயல்களால் சசிகுமார் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து சுரங்க பாதை அமைத்து தப்பிச் செல்ல முடிவு எடுக்கிறார்.
முடிவில் சசிகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வேலூர் சிறையில் இருந்து தப்பிச் சென்றாரா ?
ரேட்டிங் : 3 / 5