Take a fresh look at your lifestyle.

“ப்ரீடம்”  – விமர்சனம்

91

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், தேவ் நாயர், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் வரும் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகி இருக்கும் “ப்ரீடம்”

1990 காலகட்டத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் நாயகி லிஜோ மோல் 8 மாதங்களுக்குப் பிறகு இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகுமார் மனைவி லிஜோ மோலை பார்ப்பதற்காக ராமேஸ்வரம் வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தற்கொலைப்படைத் தாக்குதலில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இருந்து சசிகுமார் உட்பட 45 பேரை வேலூர் கோட்டைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அங்கு சிறப்பு சிறை ஒன்றை உருவாக்கி அனைவரையும் கொடுமைப்படுத்தி வருகிறார் ஜெயில் அதிகாரியான தேவ் நாயர் இந்நிலையில் கைதியாக இருக்கும் வாய் பேச முடியாத மணிகண்டன் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஜெயில் அதிகாரியான தேவ் நாயரின் வெறித்தனமான செயல்களால்  சசிகுமார் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து சுரங்க பாதை அமைத்து தப்பிச் செல்ல முடிவு எடுக்கிறார். 

முடிவில்  சசிகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வேலூர் சிறையில் இருந்து  தப்பிச் சென்றாரா ? 

காவல் துறை இவர்களுடைய திட்டத்தை கண்டுபிடித்து சசிகுமார் உட்பட அனைவரையும் தப்ப விடாமல் பார்த்து கண்டதா ?இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் “ப்ரீடம்”   
மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். கொடுமை செய்யும் அதிகாரியை எதிர்த்து கோபப்படுவதும் , மனைவி மற்றும் குழந்தைக்காக ஏங்குவதும்  என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் 
சசிகுமாரின் மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர்  ரசிகர்களின் பாராட்டை பெறும்படி நடிப்பில் ஜொலிக்கிறார் .
ஜெயில் அதிகாரியாக வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்  தேவ் நாயர், இஸ்பெக்டராக வரும் போஸ் வெங்கட் , வக்கீலாக வரும் கேஜிஎஃப் மாளவிகா, ரமேஷ் கண்ணா,  மணிகண்டன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
ஜிப்ரானின் இசையில் பாடல் மற்றும் பின்னணி  இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 
என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்க வைக்கிறது.
1991 ஆம் ஆண்டு ஆளுமை மிக்க மிகப் பெரிய தேசிய தலைவரை தற்கொலை படையால் நடைப் பெற்ற கொலை சம்பவத்தினை மைய கருவாக வைத்து பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சத்யசிவா

ரேட்டிங் :  3 / 5