திருச்சி மாவட்டத்தில் சொந்த உறவுகளுடன் வாழ்ந்து வருபவர் சூரி இவருடைய அக்கா ஸ்வாசிகா.
சூரி. அக்கா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். பாபா பாஸ்கர் – ஸ்வாசிகா தம்பதிகளுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். சில நேரங்களில் உறவினரால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஸ்வாசிகா கர்ப்பமாக ஆண் குழந்தை பிறக்கிறது. மருமகனை பார்த்ததும் சூரி. பாசமழை பொழிகிறார். அந்த ஆண் குழந்தையை தாய்மாமனான சூரி தான் பாசமாக வளர்க்கிறார். பெற்றோரை காட்டிலும் சூரி உடன் தான் அதிகம் அன்பு காட்டத் தொடங்குகிறான் அந்த சிறுவனனான பிரகீத் சிவன்.
இந்நிலையில் அக்காவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தாய்மாமனை விட்டு பிரிய மறுக்கும் சிறுவனால் சூரிக்கும் ஐஸ்வர்யா லஷ்மிக்கும் இடையே சண்டை வருகிறது.
இந்த பிரச்சனையால் ஐஸ்வர்யா லஷ்மி தன் வேலையை வெளியூருக்கு மாற்றம் செய்ய ,,,,, மனைவிக்காக சூரி குடும்பத்தை விட்டு பிரிந்து
ஸ்வாசிகா தொடர்பில்லாமல் ஐஸ்வர்யா லஷ்மியுடன் வெளியூரில் வாழ்ந்து வருகிறார்.
மகிழ்ச்சியான கீதா கைலாசம் மகளான ஸ்வாசிகாவிடம் சொல்வதற்கு அவரது வீட்டுக்கு செல்ல அங்கு ஸ்வாசிகாவின் மகனும் தன் பேரனான பிரகீத் சிவன் சொல்வதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார் .
இவர்களுடன் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்
பின்னணி இசை கதையோட்டத்திற்கு பக்க பலம் .