Take a fresh look at your lifestyle.

‘மாமன்’ – விமர்சனம்

195

திருச்சி மாவட்டத்தில்  சொந்த உறவுகளுடன்  வாழ்ந்து வருபவர் சூரி இவருடைய அக்கா ஸ்வாசிகா.

சூரி. அக்கா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். பாபா பாஸ்கர் – ஸ்வாசிகா தம்பதிகளுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். சில நேரங்களில் உறவினரால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஸ்வாசிகா  கர்ப்பமாக ஆண் குழந்தை பிறக்கிறது. மருமகனை பார்த்ததும் சூரி. பாசமழை பொழிகிறார். அந்த ஆண் குழந்தையை தாய்மாமனான சூரி தான் பாசமாக வளர்க்கிறார். பெற்றோரை காட்டிலும் சூரி உடன் தான் அதிகம் அன்பு காட்டத் தொடங்குகிறான் அந்த சிறுவனனான பிரகீத் சிவன்.

இந்நிலையில் அக்காவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம்  செய்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தாய்மாமனை விட்டு பிரிய மறுக்கும் சிறுவனால் சூரிக்கும் ஐஸ்வர்யா லஷ்மிக்கும் இடையே சண்டை வருகிறது.

இந்த பிரச்சனையால் ஐஸ்வர்யா லஷ்மி தன் வேலையை வெளியூருக்கு மாற்றம் செய்ய ,,,,, மனைவிக்காக சூரி குடும்பத்தை விட்டு பிரிந்து 

ஸ்வாசிகா தொடர்பில்லாமல்  ஐஸ்வர்யா லஷ்மியுடன் வெளியூரில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில்  ஐஸ்வர்யா லஷ்மி கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோஷமான சூரி தன் தாயான கீதா கைலாசத்திடம் சொல்ல,,,,

மகிழ்ச்சியான  கீதா கைலாசம் மகளான ஸ்வாசிகாவிடம் சொல்வதற்கு அவரது வீட்டுக்கு  செல்ல அங்கு ஸ்வாசிகாவின் மகனும் தன் பேரனான பிரகீத் சிவன் சொல்வதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார் .

முடிவில்   கீதா கைலாத்திடம் பேரனான பிரகீத் சிவன்  சொன்னது என்ன ?
பிரகீத் சிவன் சூரியிடம் பாசமாக இருப்பதால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா?  இல்லையா /  என்பதை சொல்லும் படம்தான் ‘மாமன்’
கதையின் நாயகனான சூரி உணர்வுப்பூர்வமான செண்டிமெண்ட் காட்சிகளில் அழுத்தமான குணசித்திர நடிப்பின் மூலம் அக்கா மகன் மற்றும்  அக்கா குடும்பத்தின்  மீது காட்டும் அன்பை போல் மனைவியின் குணத்தை புரிந்து கொள்ளாததை உணர்ந்து கலங்கும் காட்சிகளில் தாய்மார்களை கண் கலங்க வைக்கும் சூரி உடல் மொழியில் ‘இன்பா’ கதாபாத்திரமாக  படம் முழுவதும் வாழ்கிறார் 
கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லஷ்மி. 
கதையின் முக்கிய அழுத்தமான கதாபாத்திரத்தில்  சூரியின் அக்காவாக ஸ்வாசிகா.

 இவர்களுடன் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்  

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் மற்றும் 

பின்னணி இசை கதையோட்டத்திற்கு பக்க பலம் .

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில்  காட்சிகள் தரம் .
தாய்மாமனின் உறவை மையப் படுத்திய கதையுடன் அழுத்தம் கொண்ட குடும்ப உறவுகளின் உணர்ச்சிமயமான  திரைக்கதை அமைப்பில்  கண்களை கலங்க வைக்கும் காட்சிகளுடன் தாய்மார்கள் பாராட்டும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.
ரேட்டிங் –  3.5  /  5