Take a fresh look at your lifestyle.

நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஓதெலா, சுதாகர் செருக்குரி, SLV சினிமாஸ் இணையும் #NaniOdela2 திரைப்படத்திற்கு “தி பாரடைஸ்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது !!

24

[1:26 PM, 11/7/2024] Yaraj Aswin: நேச்சுரல் ஸ்டார் நானி, தனித்துவமான பாத்திரங்களைத் தருவதில் வல்லவர், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தில் மீண்டும் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார். நானியை முரட்டுத்தனமான, கிராமத்துக் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய தசராவின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, #NaniOdela2 படத்தில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓதெலா மற்றும் SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி ஆகியோருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தசராவின் போது வெளியிடப்பட்டது, இன்று, படக்குழு இப்படத்திற்கு “தி பாரடைஸ்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தலைப்பு, வெளிப்பார்வைக்கு அமைதியானதாக இருந்தாலும், படத்தின் போஸ்டர் மிகத் தீவிரமான மற்றும் அதிரடி கதைக்களம் காத்திரப்பதஇ உறுதி செய்கிறது. துப்பாக்கிகள், இரத்தக்களரி மற்றும் சார்மினார் சின்ன சுவரொட்டி, வன்முறை மற்றும் அதிகாரம் முக்கிய பாத்திரங்களை வகிக்கும் ஒரு சக்தி நிறைந்த கதையுடன் இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நானியின் கதாபாத்திரம் மிகவும் தீவிரமானதாகவும் இதுவரையில் பார்த்திராததாகவும் இருக்கும் என்பது தெளிவாகிறது. இது பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி அனுபவத்தை உறுதியளிக்கிறது.

இந்த பான்-இந்தியா திரைப்படத்தில், ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நானி மற்றும் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைகிறது. ஸ்ரீகாந்த் ஓதெலாவின் அழுத்தமான திரைக்கதையில், தி பாரடைஸ் நானியை இதுவரை கண்டிராத அவதாரத்தில் வழங்கவுள்ளது. நானி தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு, மிக தீவிரமாக இப்படத்திற்காகத் தயாராகி வருகிறார்.

தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இந்த திரைப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கின்றார். நானியின் திரைப்படங்களில் மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

படத்தில் பங்குபெறும் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர்கள் – நானி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓதெலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருக்குரி
பேனர் : SLV சினிமாஸ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
[1:27 PM, 11/7/2024] Yaraj Aswin: Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela2 Titled The Paradise

Natural Star Nani, known for his versatile roles, is all set to surprise his fans once again with his upcoming project. After the massive success of Dasara, which showcased Nani in a raw, rugged, and intense character, he is collaborating once again with director Srikanth Odela and producer Sudhakar Cherukuri of SLV Cinemas for the much-awaited second venture, #NaniOdela2. The film was officially launched during Dussehra, and today, the team revealed the intriguing title, The Paradise.

The title, while seemingly serene, contrasts sharply with the intense and gritty theme suggested by the film’s poster. The poster of guns, bloodshed, and the iconic Charminar p…
[3:59 PM, 11/8/2024] Yaraj Aswin: ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்

திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, இதுவரையிலான திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இது பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே இருவருக்கும் மிக முக்கியமான மைல்கல் அத்தியாயமாகும்.

ஹோம்பாலே பிலிம்ஸ், பல முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில், பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இது இந்திய பார்வையாளர்களுக்கு உயர்தர சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான ஹோம்பாலேவின் இடைவிடாத முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பலதரப்பட்ட ஜானர்களில், கலாச்சார ரீதியாக எதிரொலிக்கும் கதைக்கருக்களுடன் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை தந்து வரும் தொலைநோக்கு தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பாலே வளர்ந்து வருகிறது. KGF பார்ட் 1, KGF பார்ட் 2, காந்தாரா, சாலார் 1 ஆகியவற்றின் உலகளாவிய வெற்றியைத் தொடர்ந்து, ஹோம்பாலே ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைப்பட வரிசையை உருவாக்கியுள்ளது. இதில் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா 2 மற்றும் KGF பார்ட் 3 மற்றும் பிரபாஸுடனான அதன் புதிய முயற்சிகளும் அடங்கும்.

இந்திய சினிமாவில் மிகப்பெரும் ஸ்டார்களில் ஒருவரான பிரபாஸ், ஹோம்பாலேவின் லாண்ட்மார்க் படமான சாலார் 2, ராஜா சாப், ஸ்பிரிட், கல்கி 2 மற்றும் ஃபௌஜி உட்பட, அவரது பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹோம்பாலே உடனான பல திரைப்படங்களுக்கான ஒப்பந்தம், இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடனான அவரது வலுவான உறவைப் பிரதிபலிக்கிறது, ஹோம்பாலே பேனரின் கீழ் நான்கு படங்களில் அவர் பணியாற்றுகிறார். பிரபாஸ் போன்ற ஒரு பான் இந்திய ஸ்டாருடன், மூன்று திரைப்படங்களில் ஓப்பந்தமாவதே ஒரு அரிய சாதனையாகும். இந்த இணைவு, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அனைத்து திரைத்துறையையும் இணைத்து, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மார்கெட்டில் இருந்து முக்கிய வணிகத்தைப் பெறக்கூடிய ஒரே நட்சத்திரம் என்பதால், பிரபாஸ் இப்போது மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார். வேறு எந்த நடிகரும் எட்ட முடியாத உயரம் இது.

கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2 மற்றும் சாலார் பார்ட் 1 போன்ற திரைப்படங்களைத் தந்து, ஹோம்பாலேவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பிரசாந்த் நீல் இயக்கிய சலார் பார்ட் 2 விலிருந்து, பிரபாஸுடனான இந்த பார்ட்னர்ஷிப் தொடங்குகிறது. ஹோம்பாலேவுடன் சேர்ந்து, பிரபாஸ் மறக்க முடியாத திரைப்படங்களை உலகளவில் பார்வையாளர்களுக்கு கொண்டு வர தயாராகிவிட்டார். ஹோம்பாலே பிலிம்ஸின் நிறுவனர் விஜய் கிரகந்தூர், இந்த திட்டம் குறித்து கூறுகையில்: “ஹோம்பாலேவில், எல்லைகளைத் தாண்டிய கதைசொல்லலை முழுமையாக நாங்கள் நம்புகிறோம். பிரபாஸுடனான எங்கள் ஒத்துழைப்பு, காலத்தால் அழியாத சினிமாவை உருவாக்கும் ஒரு படியாகும், இது எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் மற்றும் மகிழ்ச்சி தரும்.

சலார் பார்ட் 2, காந்தாரா 2 மற்றும் கே.ஜி. எஃப் பார்ட் 3, என ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்தடுத்த படங்கள், உலகளவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அற்புதமான சினிமாவை உருவாக்குவதில் அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த திரைப்பட வரிசை, ரசிகர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது, பிரபாஸ் ஹோம்பாலே இணைவு, இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு நினைவு சின்னமாக, இருக்கும்.

கன்னடத்தில் கே.ஜி.எஃப் & காந்தாரா, தெலுங்கில் சாலார், தமிழில் ரகு தாத்தா, மலையாளத்தில் ஃபஹத் பாசிலை வைத்து தூமம் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்களிலும் மெயின்ஸ்ட்ரீம் ஹிட் கொடுக்க முடிந்த ஒரே தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பலே பிலிம்ஸ் திரைப்படத் துறையில் பெரும் அதிர்வுகளை உருவாக்குகியுள்ளது. பாகுபலி 1&2, கேஜிஎஃப் 2, கல்கி மற்றும் சாலார் போன்ற உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 20ல் 5ல் பிரபாஸிடன் இணைந்துள்ளது

பிரபாஸ்-ஹோம்பாலே கூட்டணி, இந்திய சினிமாவில் ஒரு களிப்பூட்டும் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்துகிறது, இது புதிய வரையறைகளை அமைக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும், தைரியமான கதைசொல்லலின் சக்தியை பெரிய அளவில் எடுத்துச் செல்லும்.