Take a fresh look at your lifestyle.

சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 15 அன்று வெளியாகும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ டிரைய்லர் வெளியாகியுள்ளது!

14

ஸ்டுடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா நிதி ஷர்மா, ரேவந்தா சாராபாய் மற்றும் ஈதன் டெய்லர் ஆகியோர் இந்த கதையை எழுதியிருக்கின்றனர்.

லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைச் சுற்றியுள்ள கொந்தளிப்பான நிகழ்வுகளை ஆழமாக ஆராய்கிறது.

இந்தத் தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தாந்த் குப்தா, மகாத்மா காந்தியாக சிராக் வோஹ்ரா, சர்தார் வல்லபாய் பட்டேலாக ராஜேந்திர சாவ்லா, முகமது அலி ஜின்னாவாக ஆரிஃப் ஜகாரியா, பாத்திமா ஜின்னாவாக இரா துபே, சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மென்டோன்சா, லிகாட் அலிகானாக ராஜேஷ் குமார், கே.சி.சங்கர் வி.பி. மேனன் கதாபாத்திரத்தில், லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனாக லூக் மெக்கிப்னி, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனாக கோர்டெலியா புகேஜா, ஆர்க்கிபால்ட் வேவலாக அலிஸ்டர் ஃபின்லே, கிளெமென்ட் அட்லியாக ஆண்ட்ரூ கல்லம், சிரில் ராட்கிளிஃப் ஆக ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நவம்பர் 15 முதல் சோனி லிவ் ஓடிடியில் மட்டும் ஸ்ட்ரீமிங் ஆகும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ மூலம் இதற்கு முன்பு கண்டிராத வரலாற்றை காணத் தயாராகுங்கள்!

டிரெய்லர் லிங்க்: https://youtu.be/Pc3Qhwoi8-Y