Take a fresh look at your lifestyle.

தங்கலான் விமர்சனம்

விருதுகளின் நாயகன் விக்ரமுக்கு இன்னும் எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்

27

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்நடிப்பில் உருவாகி, இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான்’. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

“விக்ரமுக்கு கட்டாயமாக தேசிய விருது தரவேண்டும். அவர் இந்தப் படத்திற்காக அத்தனை மெனக்கெட்டுள்ளார். வரலாற்று படங்களுக்காக இசையமைக்கும் போது ஜி.வி. பிரகாஷ் சிறப்பாகப் பணியாற்றுவார். அவர் இந்தப் படத்திலும் மிக நுணுக்கமாகப் பணியாற்றியுள்ளார்,”

கோலார் பகுதியில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்படும் பிரிட்டிஷ் ஜெனரல் க்ளெமென்ட், அதை எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு அவருக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்நிலையில், வட ஆற்காடு பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள், வழக்கமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதைக் கேள்விப்படுகிறார்.

இதனையடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் மற்ற பழங்குடி மக்களை அந்த வேலையில் ஈடுபடுத்துகிறார்.

இதற்கிடையே, அப்பகுதியில் இருக்கும் ஒரு தேவதை, அந்தத் தங்கத்தை எடுக்கவிடாமல் பாதுகாத்து வருகிறது. அதைத்தாண்டி அவர்கள் தங்கத்தை எடுத்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

கோலார் தங்கவயலை அடிப்படையாகக் கொண்டு, அதனோடு தொன்மத்தையும் சேர்த்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் – தங்கலான், காடையன் (தாதா), அரசன் (ஆரத்தி கணவர்), ஆதிமுனி, நாகமுனி என 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் தங்கத்தை தேடி பல அரசர்கள் மற்றும் அதிகாரம் படைத்த பலர் அலைந்துள்ளனர். இந்தியாவில் ஆட்சி அமைத்த பின் ஆங்கிலேயர் பலர் அந்த பகுதியில் தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர். கோலார் அருகில் வட ஆற்காடு பகுதியில் வாழும் வேப்பூர் கிராமத்து மக்கள் தான் தங்கத்தை எடுக்க சரியான ஆட்கள் என்று கணித்த ஆங்கிலேய துரையான கிளெமண்ட் (டேனியல் கால்டாகிரோன்) தங்கலான் (சியான் விக்ரம்)-யை சந்தித்து தங்கத்தை எடுக்க முயற்சி செய்கிறார்.
கோலார் பகுதியை ஆளும் ஜமீன் (முத்துக்குமார்) அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் நிலங்களை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். அந்த நிலம் தனக்கு சொந்தமானது என சொல்லி மக்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கி வருகிறார்.
ஊர் தலைவர் தங்கலான் (விக்ரம்) தனது மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் குழந்தைகள் என சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். வெள்ளைக்காரர் டேனியல் விக்ரம் மற்றும் ஊர் மக்களை சந்தித்து தங்கம் தேட உதவுங்கள் என சொல்ல, ஜமீன் போன்றவர்களிடம் இருந்து தப்பிக்க வெள்ளையருக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால் வெள்ளைக்காரன் நம்மை மேன்மைப்படுத்துவான், நம் அடிமை விலங்கு அகன்று போகும் என தனது மக்களுடன் போராடும் தங்கலான் தங்கத்தை எடுக்க முயற்சி செய்கிறார்.
தங்கத்தை பற்றியும் அதை காக்கும் நாகர் இன தலைவி ஆரத்தி பற்றியும் தனது குழந்தைகளுக்கு விக்ரம் கதை சொல்லும் வழியாக தங்கலானின் பாட்டன் காடயன் ஆரத்தியை வீழ்த்தி சோழ மன்னனுக்கு எப்படி தங்கத்தை எடுத்துக் கொடுத்தான் என்கிற கதையை காட்டுகின்றனர்.
இறுதியில் தங்கலானுக்கு தங்கம் கிடைத்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.