Take a fresh look at your lifestyle.

அனந்தா திரைவிமர்சனம்

12

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசன் விஜய், நிழல்கள் ரவி, சுகாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்து ஓடிடியில் வெளியிகியிருக்கும் ஆன்மீக படம் அனந்தா
ஒளிப்பதிவு : சஞ்சய்
இசை : தேவா

கதை

5 பக்தர்கள் வாழ்வில் சத்ய சாய்பாபாவால் நடந்த அற்புதங்களை, அவர் ஆசியால் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை சொல்லியிருக்கும் கதை.

தொழிலதிபரான ஜெகபதி பாபு, பிஸினஸ், பணம், ஓய்வில்லாமல் உழைப்பு என வேறு உலகில் இருக்கிறார். அப்போது அவர் பகவான் அருளால் உண்மையான பக்தி பாதைக்கு மாறுகிறார். வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொண்டு, ஒரு கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிலரை எப்படி மாற்றுகிறார் என்பது முதல் கதை.

தனது மனைவி திடீரென இறக்க, கடவுள் மீது அதிருப்தி அடைகிறார். அப்போது அவருக்கு மனைவியின் மறைவு குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வர, அவர் எப்படி சாய்பாபாவை போற்றுகிறார் என்பது 2வது கதை.

நடன கலைஞரான அபிராமி வெங்கடாசலத்துக்கு டான்ஸ் நிகழ்ச்சி நடக்கும் சிறிது நேரத்துக்கு முன்பு காலில் பிரச்னை ஏற்பட்டு, அவரால் டான்ஸ் ஆட முடியாத நிலை. அவர் தந்தை தலைவாசல் விஜய் கடவுளை திட்ட, அபிராமி புட்டபர்த்தி நோக்கி பிரார்த்தனை செய்ய என்ன நடக்கிறது என்பது 3வது கதை.

தனது ஒரே மகன் காசியில் கங்கை நதியில் முழ்கி மரண படுக்கையில் போராட, டாக்டர்கள் கை விரித்த நிலையில் பாபாவை சரணாகதி அடையும் பாசமுள்ள தாய் சுகாசினி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது 4வது கதை.

அமெரிக்காவில் வசிக்கும் சாய்பாபா பக்தர்களான இரண்டு வெள்ளைக்காரர்கள் வீட்டை சுற்றி காட்டு தீ சூழும் நிலையல், பாபா அருளாள் அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள் என்பது 5 வது கதை. தன்னை நம்பும், பக்தியுடன் அழைக்கும் ஒரு சிறுமிக்கு சத்யசாபா காட்சி கொடுத்தாரா? இல்வையா? என்பதுடன் படம் முடிகிறது.

தொழில் அதிபராக கடவுள் பக்தியால் மனம் மாறி நல்லது செய்பராக ஜெகபதி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார்
பகவான் பக்தராக மாறுபவராக ஓய்.ஜி. மகேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார்.
கோடிக்கணக்கான உண்மையான பக்தர்களின் பிரதிநிதியாக சுகாசினி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
டான்ஸ் ஆட முடியாமல் தவிப்பராக உணர்ச்சிகரமாக நடித்து இருக்கிறார் அபிராமி. அமெரிக்காவில் வசிப்பவரும் பாபாவின் அருளை எப்படி பெறுகிறார்கள் என்ற கேரக்டரில் இரண்டு வெள்ளைக்கார தம்பதிகள் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவரின் மகிமை, பக்தர்கள் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய அற்புதங்களையும்
சத்ய சாய்பாபா பக்தர்கள் மீது காட்டும் பதிவு, பாசம் அருள் என பல சீன்கள் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில்
எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கும்
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாராட்டுக்கள்.