Take a fresh look at your lifestyle.

ரகு தாத்தா – விமர்சனம்

கீர்த்தி சுரேஷ் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

28

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்க, எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷின், ரவீந்திர விஜய் உள்பட பலரும் நடித்திருக்கும் படம் ரகு தாத்தா.

முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்து வரும் காலத்தில் வள்ளுவன்பேட்டை என்று கிராமத்தில் இந்தி கற்றுக் கொடுக்கும் சபா இருக்கக் கூடாது என போராடி அதற்கு பூட்டுப் போடும் கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்). ஆனால் இந்தி சபாவை திறந்த தீருவேன் என இருக்கும் இந்தி பண்டிதர் (ஆனந்த சாமி) ஒருவர் இருக்கிறார்.

வங்கியில் பணிபுரிந்து வரும் கீர்த்தி சுரேஷ்  இந்தி படித்தால் தான் புரமோஷன் கிடைக்கும் என்ற நெருக்கடி ஏற்படுகிறது. க. பா என்ற பெயரில் சிறுகதைகளையும் எழுதி வரும் அவருக்கு தமிழ் செல்வன் (ரவிந்திர விஜய்) ரசிகராக உள்ளார்.

தாத்தா எம்.எஸ். பாஸ்கருக்கு கொடிய நோய் பாதிப்பால் இறந்துவிடுவார் என கூறப்பட, தாத்தாவின் கடைசி ஆசைகளில் ஒன்றாக பேத்தியின் திருமணம் இடம்பெறுகிறது.

தன்னை புரிந்துக் கொண்டும் தனது பெண்ணிய கருத்துக்களை மதிக்கும் நபராக இருக்கும் தமிழ் செல்வனையே திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கும் கயல்விழி, இந்தி கற்கிறாரா, இந்தி சபாவுக்கு என்ன ஆனது என்பதற்கான விடையாக படம் உள்ளது.

இயக்குநர் : சுமன்குமார் தயாரிப்பாளர் : விஜய் கிரகண்தூர் திரைக்கதை : சுமன்குமார் கதை : சுமன்குமார் நடிப்பு : கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர
படத்தில் காமெடி காட்சிகள், குறிப்பாக கீர்த்தி சுரேஷ் மற்றும் திவ்ய தர்ஷினி இணைந்து நடிக்கும் காட்சிகள் மக்களை நன்றாக சிரிக்க வைத்துள்ளன.