Take a fresh look at your lifestyle.

‘ஹனி ரோஸின் ‘ரேச்சல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

21

 

நடிகை ஹனி ரோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரேச்சல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த கிரிப்பிங் டீசர் ஆக்‌ஷன் பிரியர்களுக்கென அதிரடி ஆக்‌ஷன் மற்றும் இரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கொண்டுள்ளது.

புகழ் பெற்ற இயக்குநர் அப்ரிட் ஷைனின் இணை தயாரிப்பிலும் இணை எழுத்திலும் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்தினி பாலா இயக்கியுள்ளார். ஹனி ரோஸின் ஃபிட்னஸ் மற்றும் நடிப்புத் துறையில் அவரின் அனுபவத்தை இந்தப் படம் சரியாக பயன்படுத்தியிருப்பதை டீசரில் பார்க்க முடிகிறது.

இப்படத்தில் பாபு ராஜ், கலாபவன் ஷாஜோன், ரோஷன் பஷீர், சந்து சலீம்குமார், ராதிகா ராதாகிருஷ்ணன், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ஜோஜி, தினேஷ் பிரபாகர், பாலி வல்சன், வந்திதா மனோகரன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

பாதுஷா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் பாதுஷா என்எம், ராஜன் சிராயில் மற்றும் அப்ரிட் ஷைன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதையை ராகுல் மணப்பட்டு, திரைக்கதையை ராகுல் மணப்பட்டு மற்றும் அப்ரிட் ஷைன் எழுதியுள்ளனர்.

இணைத் தயாரிப்பாளர் – ஹன்னன் மரமுட்டம், ஒளிப்பதிவு – ஸ்வரூப் பிலிப்,
இசை & பின்னணி இசை – இஷான் சாப்ரா,
எடிட்டர் – மனோஜ், தயாரிப்பு வடிவமைப்பாளர் – சுஜித் ராகவ்,
ஒலி கலவை – ராஜகிருஷ்ணன் எம் ஆர், ஒலி வடிவமைப்பு – ஸ்ரீ சங்கர்,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் – மஞ்சு பாதுஷா, ஷெமி பஷீர், ஷைமா முஹம்மது பஷீர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்- பிரவீன் பி மேனன்,
தலைமை இணை இயக்குநர் – ரதீஷ் பலோடு,
த்ரில்ஸ் – ராஜசேகர், மாஃபியா சசி,
பிசி ஸ்டண்ட்ஸ், மேக்கப் – ரதீஷ் விஜயன், ராஜேஷ் நென்மரா,
ஆடை – ஜாக்கி,
லைன் புரொடியூசர் – பிரிஜின் ஜே பி, மாத்யூ கொன்னி,
ஃபைனான்ஸ் கட்டுப்பாட்டாளர் – ஷிஜோ டொமினிக், ராபின் அகஸ்டின்,
திட்ட ஒருங்கிணைப்பாளர் – பிரியதர்ஷினி பி எம், தயாரிப்பு நிர்வாகி – சகீர் ஹுசைன்,
விஎஃப்எக்ஸ் – லைவ்ஆக்ஷன் ஸ்டுடியோஸ்,
பாடல்கள் – பி கே ஹரிநாராயணன், விநாயக் சசிகுமார், ராகுல் மணப்பட்டு,
மக்கள் தொடர்பு- சுரேஷ் சந்திரா, ஏ எஸ் தினேஷ், அதிரா தில்ஜித், அனூப் சுந்தரன்,
ஸ்டில்ஸ்- நிடாட் கே என், அனினோப் கே என், பப்ளிசிட்டி டிசைன்ஸ்- டென்பாயிண்ட்,
டீசர் கட் -பென் ஷெரின் பி, டிஜிட்டல் மார்க்கெட்டிங்: அப்ஸ்குரா என்டர்டெயின்மென்ட்ஸ், அனூப் சுந்தரன்