கண்ணன் ரவி தயாரிப்பில்
தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் தங்க நட்சத்திரம் 2026 (TN 2026). தர்புகா சிவா இசையமைப்பில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, சாந்தினி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்.
கதை
குல்கந்த் குமார்(நட்ராஜ்) வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து குல்கந்த் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் இவர் கடைக்கு வரும் தயாரிப்பாளர் அறிமுகம் கிடைக்க அவர் மூலம் ஒரு படத்திலே பெரிய நடிகராகிறார். ஆனால், அவருக்கு துணையாக யாருமே இல்லாமல் தடுமாற, அவரின் முதல் படம் பிடித்துபோய் தம்பி ராமையா அவருக்கு ஆதரவாக பல உதவிகளை செய்கிறார்.
அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆன தம்பி ராமையா.
இந்த சூழ்நிலையில் கு குல்கந்த் குமார் படம் தொடர்ந்து பிளாப் ஆக
நட்ராஜ் வளர்ச்சிகாக உதவி செய்து அவரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆக்கிறார். அதை தொடர்ந்து நட்ராஜ் நன்றாக வளர்ந்த பிறகு தன் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்ற கவர்மெண்ட் இவர் அரசியலுக்கு வருவாரோ என நினைத்து பல நெருக்கடிகளை தருகிறது.
இதனால் கொந்தளித்து குல்கந்த் குமாரான நட்ராஜ் புதிய கட்சி ஒன்றை தொடங்குகிறார், 2026-ல் முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்க, அது நடந்ததா இல்லையா? குல்கந்துக்கு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
நட்டி நட்ராஜ் நடிகனாக அரசியல்வாதியாக சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல்தான், ஒரு நடிகரின் வளர்ச்சியையும், அவர் வளர்ந்த பிறகு எப்படி மாறுவார் என்பதையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அதிலும் இடைவேளையில் போலிஸ் தடுக்க அவர் இறங்கி நடந்து வரும் காட்சி கைதட்டல் பெறுகிறது.
தம்பி ராமையா நட்ராஜுக்கு காட்பாதராக சிறப்பாக நடித்து பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார். நாயகியாக சாந்தினி, சித்தாரா நடிப்பும் அருமை. யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், விஜி சந்திரசேகர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, டி.ராஜேந்தர் தொடங்கி லேட்டஸ்ட்டாக விஜய்வரை அந்த லிஸ்ட் நீளும். அப்படி ஒரு நடிகர் தனக்கு இருக்கும் புகழை அரசியலுக்கு பயன்படுத்துவதும் அதனால் வரும் விளைவுகளும்தான் படத்தின் ஒன்லைன். அதனை சிறப்பாகவும், சிரிப்பாகவும் எல்லோரும் ரசிக்கும்படி இன்றைய ட்ரெண்டுக்கு தகுந்தபடி தம்பி ராமையா கதை வசனம் எழுதி கைத்தட்டல்களை அள்ளுகிறார். இயக்குநர் உமாபதி அதை தனது திரைக்கதையின் மூலம் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
மதிப்பெண் 4/5