Take a fresh look at your lifestyle.

காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

17

காக்கி சர்க்கஸ் (Kaakee Circus) என்பது ZEES5-ல் வெளியாகி இருக்கும் ஒரு விறுவிறுப்பான மற்றும் நகைச்சுவையான கிரைம் த்ரில்லர்.

அமீன் பாரிஃப் இயக்கத்தில்
முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் தொடர்.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.

கதை

திருட்டு குற்ற சம்பவத்தை அடிப்படையாகக் எடுக்கப்பட்ட சீரிஸ் ஆகும்

குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் சிறைச்சாலையில் இருந்து வெளியே சென்று பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது சிறைச்சாலையில் உள்ள கண்ணகியின் கோவில் உண்டியலில் பணம் நிறைய இருக்கிறது என்று பேசிக்கொண்டு செல்கிறார்கள் அதனை பேருந்தில் பயணம் செய்த யாரோ ஒருவர் அதனைக் கேட்டுக் கொண்டு அந்த சிறைச்சாலையில் இருந்து கண்ணகியின் கோவில் உள்ள உண்டியலில் பணத்தை திருடி சென்று விடுகிறார்கள் திருடுப்போன பணத்தை உண்டியலில் சேர்ப்பதற்காக ஹீரோ வான சுபாஷ் செல்வம் பைனான்சியல் கடன் வாங்குகிறார். கடன் வாங்கிய பணத்தை இரவு வீட்டில் வைத்துவிட்டு தூங்க செல்கிறார் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த பணத்தை யாரோ திருடி சென்று விடுகிறார்

இந்த இரண்டு திருட்டு சம்பவங்களையும் செய்தது யார் அவர்களை ஹீரோவான சுபாஷ் செல்வம் கண்டுப் பிடித்தாரா இல்லையா என்பதே
சீரிஸின் மீதி கதை.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வம் இரண்டு பேரும் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக நடித்திருக்கும் வின்சு ஷாம் மற்றும் கெளதமி ஆகியோர் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் என இந்த வெப் தொடரில் நடித்த எல்லோரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
நீரஜ் ரவியின் ஓளிப்பதிவு அருமை. சேவியர் மற்றும் விபின் பாஸ்கரின் இசை ரசிக்கவைக்கிறது.

காக்கி சர்க்கஸ் கலகலப்பான காட்சிகளுடன் கூடிய ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்குத் தொடர். நகைச்சுவை மற்றும் திரில்லரை எவ்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் அமீன் பாரிப்.பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5