விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, கெளரி கிஷன், ஆனந்தராஜ், மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany – LIK). செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்
கதை
2040-ல் நடக்கும் கதை LiK கதை
காதலிக்கும் ஒவ்வொரு ஜோடியும் எஸ்.ஜே. சூர்யா கண்டுபிடித்த LiK என்கிற App-ல் இணைந்திருக்கின்றனர். காதலனோ அல்லது காதலியோ அவரவர் ஜோடிக்கு உண்மையாக இல்லை என்றால் உடனடியாக இந்த Lik App மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் உடனடியாக பிரேக் அப் செய்துகொண்டு பிரிந்துவிடுகின்றனர். பெனால்டியும் பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்கிறது.
போனில் அனைவரும் மூழ்கி கிடைக்க, போனை பயன்படுத்தவே முடியாத பசுமை உலகம் என்கிற இடத்தை நடத்தி வருகிறார் சீமான்(பிரதீப் ரங்கநாதனின் தநதை). சமூக வலைத்தளம் மூலம் தவறு செய்பவர்களுக்கு தண்டனையாக இந்த இடம் இருக்கிறது. சீமானின் மகனான பிரதீப், கிரித்தி ஷெட்டியை பார்த்தவுடன் முதல் முறையாக காதல்கொள்கிறார். ஆனால், கிரித்தி ஷெட்டியுடன் பேசவேண்டும், அவரை காதலிக்க வேண்டும் என்றால் பிரதீப்பிற்கு LiK போன் தேவைப்படுகிறது. தனது தந்தைக்கு தெரியாமல், போன் வாங்கி அதில் LiK App மூலம் கிரித்திக்கு request அனுப்புகிறார் பிரதீப். பின், அந்த request-ஐ கிரித்தி Accept செய்ய, இருவரும் பேசி பழக ஆரம்பிக்கிறார்கள். இது ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது.
இந்த சமயத்தில் எஸ்.ஜே. சூர்யா தனது LiK App-ல் புதிதாக லவ் மீட்டர் என்கிற அப்டேட்டை அறிமுகம் செய்கிறார். இந்த அப்டேட் மூலம், ஒவ்வொரு காதல் ஜோடிக்கும் இடையே எவ்வளவு சதவீதம் காதல் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். இதனை செக் செய்யும் ஜோடிகளில் பலருக்கும் 40% சதவீதத்திற்கும் கீழே காட்டியதால், பலரும் பிரேக் அப் செய்துவிட்டு பிரிந்துவிடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கிரித்தி ஷெட்டி – பிரதீப் இருவரும் தங்களது காதல் சதவீதத்தை செக் செய்கிறார்கள். இவர்களுக்கு வெறும் 3% சதவீதம் மட்டுமே அந்த Lik App-ல் காட்டுகிறது. இதனால் பிரதீப்பை பிரேக் அப் செய்கிறார் கிரித்தி. ஒரு App எப்படி என்னுடைய காதலுக்கு சதவீதம் தரமுடியும், அதெல்லாம் பொய், LiK App ஒரு டுபாக்கூர் என நிரூபித்து காட்டி தன் காதலி கிரித்தி ஷெட்டியுடன் சேருகிறேன் பார் என SJ சூர்யாவிடம் சபதம் விடுகிறார். இதில் பிரதீப் வெற்றிபெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிபபிலும் சண்டைக்காட்சிகளிலும் நடனத்திலும் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். கதாநாயகியாக கிரித்திஷெட்டி நடிப்பாலும் அழகாலும் நம்மை கவர்கிறார். பிரதீப்பின் தந்தையாக சீமான் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிப்பு மிரட்டல். யோகி பாபு, கெளரி கிஷன், மாளவிகா, மிஷ்கின், ஆனந்தராஜ், என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்நிரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம். ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
2040ல் நடக்கும் நடக்கும் கதையை பேண்டசியாக யோசித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் திரைக்கதையில் இன்னும் சுவாராஸ்யப்படுத்தி இருக்கலாம். விக்னேஷ் சிவனின் பேண்டஸி உலகத்திற்காக LIK ஒருமுறை பார்க்கலாம்.
மதிப்பெண் 3.5/5