Take a fresh look at your lifestyle.

’ஆரியன்’  – விமர்சனம்

8

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கருணாகரன் ,அவினாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆரியன்’

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் .பொருளதிகாரம் என்ற நிகழ்ச்சிக்காக இளம் நடிகரிடம் நேரலையில் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து துப்பாக்கி முனையில் அந்த இளம் நடிகரின் காலில் சுட்டுவிட்டு அந்த அரங்கை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

அடுத்த 5 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன், முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என்று கூறுகிறார்.

போலீஸ் மேலிடம் தொடர் கொலைகளை தடுக்க  போலீஸ் உயரதிகாரியான விஷ்ணு விஷால் தலைமையில் தனி படை குழுவிடம் ஒப்படைக்கிறது.

விஷ்ணு விஷால் கொலையாளி செல்வராகவனை பிடிப்பதை விட்டுவிட்டு, அவர் செய்ய இருக்கும் கொலைகளை  தடுப்பதற்காக முயற்சிக்கிறார்

முடிவில் விஷ்ணு விஷால் செல்வராகவன் கொல்ல இருக்கும் ஐந்து பேரை காப்பாற்றினாரா? என்ன காரணத்திற்காக ஐந்து பேரை  கொலை அவர் சொல்கிறார் ?   என்பதை சொல்லும் படம்தான்  ’ஆரியன்’

போலீஸ் அதிகாரியாக காக்கி உடையில் கம்பீரமாக வலம் வரும் விஷ்ணு விஷால் நேர்மையான அதிகாரியாக இரவு பகல் பாராமல் கொலையை தடுக்க எடுக்கும் முயற்சிகள் .ஒவ்வொன்றும் அவரது கடின உழைப்பை கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது. மானாசா உடனான காதல், திருமணம்,விவாகரத்து ,ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் செல்வராகவன் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

தொலைக்காட்சி தொகுப்பளராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர் என அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக உள்ளது.

கொலைகளை தடுக்க நினைக்கும் கதாநாயகனை மைய கருவாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரவீன்.கே

மதிப்பீடு : 4.2 /5