Take a fresh look at your lifestyle.

‘ஜின் – தி பெட்’ – விமர்சனம்

105

ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் சாரிப்பில் டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன், பாவ்யா டிரிகா, வடிவுக்கரசி, பாலசரவணன், ராதாரவி, நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வினோதினி, ரித்விக், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜின் – தி பெட்’

மலேசியாவில் நட்சத்திர ஹோட்டலில் பாடகராக இருக்கும் நாயகன் முகேன் ராவ். ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் அங்கிருந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு வர தயாராகிறார்.

இந்நிலையில், பழங்கால பொருட்கள் விற்கும் கடைக்குச் செல்லும் முகேன் ராவ் , அங்கு ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஜின்’னை வாங்கிக் கொள்கிறார்.

அந்த ஜின்’னை வாங்கியதில் இருந்து தனக்கு நல்லதாக நடக்கிறது என்று நினைத்துக் கொண்டு அதனை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு வருகிறார் முகேன் ராவ்

சென்னை வந்ததும் நாயகி பவ்யா திரிகாவை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடிக்கடி சந்தித்துக் கொள்ள, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

இவர்களின் காதல் பெரியோர்கள் நிச்சயித்தபடி திருமணத்தில் முடிவடைகிறது.

முகேன் ராவ் எடுத்து வந்த ஜின்’னை, அவரது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. ஜின் வந்ததில் இருந்து அபசகுணங்கள் நடப்பதாக அவரது வீட்டில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவ்யா  திரிகா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நிலையில் மயக்கமாய் இருக்கிறார் .

குடும்பத்தில் உள்ள அனைவரும் பவ்யா  திரிகாவின் இந்த நிலைக்குக் காரணம் விட்டிலுள்ள ஜின் தான் என சொல்ல தான் ஆசையுடன் வாங்கி வந்த ஜின்’ஐ கோபத்தில் வெளியே தூக்கி வீசி விடுகிறார் முகேன் ராவ் .
முடிவில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் பவ்யா  திரிகாவை கொடுரமாக தாக்கியது,,, முகேன் ராவ் ஆசையாய் வளர்த்து வந்த ஜின்’ஆ அல்லது வேறு பிரச்சனையில் அவரை தாக்கியது மர்ம நபர்களா ?
முகேன் ராவ் கோபத்தில் வெளியே தூக்கி வீசி எறிந்த ஜின்’ மீண்டும் அவருடன் இணைந்ததா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஜின்’
 
நாயகன் முகேன் ராவ் படத்தின் நாயகனாக காதல் ,நடனம் ,ஆக்க்ஷன் என இளமை துள்ளலுடன் நடித்தாலும் பல காட்சிகளில் முக பாவனைகளில் திறமையாக சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியிருக்கலாம்.
கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் அழகான நாயகி பவ்யா திரிகா.
 
திரைக்கதைக்கு பக்க பலமாய் பால சரவணனின் காமெடி.

ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி ரித்விக் என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .

 
விவேக் மெர்லின் இசையும் ,அருண் ராஜா ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

மலேசியாவிலிருந்து தன் சொந்த நாட்டிற்க்கு திரும்பும் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தான் ஆசையுடன் வாங்கி வந்த ஜின்’ னின் உதவியால் வெற்றி பெறுவதை மையமாக வைத்து குழந்தைகள் முதல் குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் படமாக படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் இயக்குனர் T R பாலா.

ரேட்டிங் – 3 / 5