Take a fresh look at your lifestyle.

‘மனிதர்கள்’ – விமர்சனம்

77

ஸ்டுடியோ மூவிங் டர்ட்டில் மற்றும் ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத், நவீன் குமார், சாம்பசிவம், தரணிதரன் பரிமளா, குலோத்துங்கன் , யுவராஜ் ஆகியோர் தயாரிப்பில் ராம் இந்திரா இயக்கத்தில் கபில் வேலன், தக்ஷா, அர்ஜுன் தேவ் , குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மனிதர்கள்’

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன் தனபால், சாம்பசிவம், அர்ஜுன் தேவ், பிரேம் ஆகிய நண்பர்கள் சேர்ந்து ஒரு  இரவில் மது அருந்துகிறார்கள்.

போதையில் திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் எதிர்பாராத விதமாக பிரேம் இறந்து விடுகிறார்.

இந்நிலையில் பயத்தில் அலறும் நண்பர்கள் அனைவரும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க பொழுது விடிவதற்குள் பிரேம் உடலை மறைவான இடத்தில் புதைக்க முடிவு செய்து பிரேமின் உடலை கார் டிக்கியில் வைத்து கொண்டு அதனை புதைப்பதற்கான இடத்தை தேடி காரில் அனைவரும் செல்கின்றனர் .

இந்நேரத்தில் பிரேமின் மனைவி நண்பர்களில் ஒருவருக்கு போனில் தொடர்பு கொள்ள பயத்தில் உறையும் நண்பர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
முடிவில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பொழுது விடிவதற்குள் பிரேமின் உடலை புதைத்தார்களா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘மனிதர்கள்’
கதையில் நண்பர்களாக நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் , குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள் 
இசையமைப்பாளர் அனிலேஷ் எம். மேத்யூ இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது
இரவு நேர காட்சிகளை அழகாகவும் சிறப்பாகவும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்
ஓர் இரவில் நண்பர்களுக்குள் போதையில் ஏற்படும் பிரச்சனையால் எதிர்கொள்ளும் சம்பவங்களை மைய கருவாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம் இந்திரா.
ரேட்டிங் : 2.5 / 5