மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார் இசையில் அஜித்குமார், திரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், யோகிபாபு, பிரபு, ஜாக்கி ஷெராப், பிரியா வாரியர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘குட் பேட் அக்லி’
2008 ஆம் ஆண்டு மும்பையில் மிகப்பெரும் கேங்க்ஸ்டராக அஜித்குமார் இருக்கிறார். இவரது மனைவி திரிஷா இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
குழந்தையை பார்க்க சென்ற அஜித் குமாரை குழந்தையை தொடக்கூடாது என்றும் இந்த கேங்க்ஸ்டர் வாழ்க்கையை விட்டு விடுமாறு திரிஷா கூறுகிறார்.
திரிஷா வார்த்தைக்கு கட்டுப்பட்டு மனம் திருந்தும் அஜித் குமார் மகனுக்காக செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மும்பை சிறையில் கைதியாக 18 ஆண்டுகள் இருக்கிறார்.
இதனையடுத்து திரிஷா தனது குழந்தையுடன் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று விடுகிறார்.
ஒவ்வொரு வருடமும் அப்பாவின் வருகைக்காக காத்திருக்கும் மகனுக்கு ஏமாற்றமே கிடைக்கிறது .
18 வருடங்களுக்கு பிறகு மகனின் பிறந்த நாளுக்காக தண்டனை முடிந்து ஸ்பெயினுக்கு வரும் அஜித்குமாருக்கு மிக பெரிய அதிர்ச்சியாக போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அஜித் குமாரின் மகன் கைது செய்யப்பட்டு அந்நாட்டு போலீசாரால் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இறுதியில் உண்மையான குற்றவாளி யார் ? என்பதை அஜித் குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘குட் பேட் அக்லி’ படத்தின் மீதிக்கதை.
ரெட் டிராகன் என்ற கதாபாத்திரத்தில் மாஸான தாதாவாக அஜித்குமார் காதல்,மகன் பாசம், ஆக் க்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முழுக்க முழுக்க மாஸ் காட்சிகள் மட்டுமே குறிக்கோளாக வைத்து படத்தை உருவாகியிருக்கிறார்கள். அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் கொண்டாட்டம் .
ரம்யா என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கும் த்ரிஷா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். மனைவி மற்றும் அம்மா இரண்டிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் இரண்டு வேடங்களில் வேடங்களில் நடித்திருக்கிறார்.த்ரிஷாவின் சகோதரராகவும் அஜித்திற்கு உதவி செய்பவராகவும் பிரசன்னா வருகிறார்.சிறை அதிகாரியாக சாயாஜி ஷிண்டே, பிரியா வாரியர் , பிரபு, பிரசன்னா, சுனில், சிறப்பு தோற்றத்தில் வரும் சிம்ரன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது.
அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
குற்றம் செய்யாத மகனை சிறையில் இருந்து மீட்க அப்பா அஜித்குமார் எடுக்கும் அதிரடி முயற்சிகளை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித்குமார் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஆக்க்ஷன் விருந்து
ரேட்டிங் – 3 . 5 / 5