சிக்னேச்சர் புரொடக்க்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் கேத்ரின் ஷோபா மற்றும் லெனின் தயாரிப்பில் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, வடிவுக்கரசி, நட்டி, சாண்டி, ரியோ ராஜ், யோகிபாபு, துளசி, ஆதிரை , கனிகா, , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவ்யா, ஆயிரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நிறம் மாறும் உலகில்’
சென்னையில் பிறந்தநாள் அன்று நண்பர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய தாய் விஜி சந்திரசேகரிடம் கோபித்துக் கொண்டு தனது தோழி வீட்டிற்குச் செல்கிறார் லவ்லின் சந்திரசேகர்.
ரயில் பயணத்தில் டிடிஆர்’ஆக வரும் யோகிபாபுவை சந்திக்கிறார் லவ்லின். இருவரும் பேசிக் கொள்ள, தாயின் அருமை என்னவென்று தெரிந்து கொள்ள நான்கு உண்மைச் சம்பவங்களை லவ்லினிடம் கூறுகிறார் யோகிபாபு
பாலியல் தொழில் செய்யும் கனிகாவை சிறுவயதில் இழந்த நட்டி மிகப்பெரிய தாதாவாக மும்பையில் வலம் வருகிறார்.
மற்றொரு தாதாவான சுரேஷ் மேனன் தனது மகனைக் கொன்ற நட்டியை சுட்டு கொல்ல நேரம் எதிர்பார்த்தது காத்துக்கொண்டிருக்கிறார்.
மீனவ குடும்பத்தைச் சேர்ந்த ரியோராஜ் , சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்தவர் தாய் ஆதிரையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.
காதலி அய்ரா கிருஷ்ணனிடம் புதிதாக உறவால் கிடைத்த அம்மாவை அறிமுகம் செய்யும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காதலி அய்ரா கிருஷ்ணனை அம்மா என்ற உறவுக்காக தன் காதலை தூக்கி எறிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன் சாண்டியின் கதையாக நான்கு விதமான கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் அம்மா மீதான பாசப் போராட்டம் தான் ‘நிறம் மாறும் உலகில்’.