தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் துவத்தூர் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை.
மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் அடுத்துடுத்து மர்மமான முறையில் இறந்து கொண்டே இருப்பதால் தூவத்தூர் கிராமம் மீன்பிடிப்பதற்கு உகந்த கிராமம் இல்லை என்பதால் அரசாங்கம் மீன்பிடிக்க தடை விதிக்கிறது.
காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள்.
சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன் ஜி.வி.பிரகாஷும், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார்.
மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் வழக்கமான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதி, அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .