Take a fresh look at your lifestyle.

க்ராணி திரைவிமர்சனம்

25

விஜயகுமரன் இயக்கத்தில் வடிவுக்கரசி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘க்ராணி’ (Granny) , இதில் திலிபன், சிங்கம்புலி, கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை

பட ஓப்பனிங்கில் ஒரு குழந்தை மர்மமான முறையில் இறக்கிறது. அந்த குழந்தையை கொன்றது மிருகமா? மனிதரா? என்ற கோணத்தில் போலிஸ் அதிகாரிகளான திலிபன், சிங்கம்புலி விசாரனையை துவக்கி ஆராய்கின்றனர். இந்த சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் ( அனந்து நாக்) மனைவி(அபர்ணா)ஒரு ஆண் குழந்தை (மாஸ்டர் கன்ஷ்யாம்)ஒரு பெண் குழந்தை(பேபி இந்திரா) அரண்மனை போன்று உள்ள மச்சி வீட்டில் வீட்டை ஆல்டர் செய்து வசிக்க ஆரம்பிக்கின்றனர் ஊர்த்தலைவர் கஜராஜ் உதவியுடன்.
இந்த சூழ்நிலையில் அந்த வீட்டிற்கு வடிவுக்கரசி வருகிறார்.பாட்டியாக இருக்கும் வடிவுக்கரசி தன் கணவனை போனறு என்றும் இளமையாக இருக்க மூன்று குழந்தைகளின் இதயத்தையும் அபூர்வ பூவையும் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என்பதால் மச்சி வீட்டில் உள்ள கணவன் மனைவியை கொன்று அந்த இரு குழந்தைகளையும் கொன்று அவர்களின் இதயத்தை சாப்பிட திட்டமிடுகிறாள். இந்த திட்டத்தை விசாரணை மூலம் தெரிந்து கொண்ட போலிஸ் அதிகாரிகளான திலீபன், சிங்கம்புலி வடிவுக்கரசியின் திட்டத்தை முறியடித்து அந்த குழந்தைகளை காப்பாற்றனார்களா? இல்லையா? பாட்டியான வடிவுக்கரசியின் முடிவு என்ன? என்பதே சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை..

பாட்டியாக வடிவுக்கரசி வில்லி வேடத்தில் சிறப்பாக நடித்து மிரட்டியுள்ளார்.
போலிஸ் அதிகாரிகளாக திலீபன், சிங்கம்புலி நடிப்பு அருமை. ஊர்த்தலைவராக கஜராஜ் சிறப்பாக நடித்துள்ளார். அனந்து நாக், அபர்ணா, மாஸ்டர் கான்ஷ்யம், பேபி சந்திரியா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். டாக்டர் செல்லைய்யா பாண்டியன் இசை படத்திற்கு கூடுதல் பலம். கு. கார்த்திக்கின் பாடல்கள் வசனம் அருமை. MS கோபியின் எடிட்டிங் ஷார்ப்.

இயக்குநர் விஜய குமரன் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.