Take a fresh look at your lifestyle.

’3 பி.ஹெச்.கே’ – விமர்சனம்

101

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் : சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், யோகிபாபு, சாய்த்ரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’3 பி.ஹெச்.கே’

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சரத்குமார் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத் ஆகியோருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

சரத்குமாருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை அதற்காக சிறுக சிறுக பணத்தை சேமிக்கிறார்.
இந்நிலையில் சித்தார்த் 12 ஆம் வகுப்பில குறைவான மதிப்பெண் எடுத்ததால், கல்லூரியில் சேர அதிகப்படியான பணம் தேவைப்படுவதால் சேமிப்பு பணம் அனைத்தையும் கல்லூரியில் சேர்ப்பதற்காக கட்டிவிடுகிறார்.

இதனையடுத்து மீண்டும் வீடு வாங்குவதற்காக பணத்தை சேமிக்க சரத்குமார் மகள் திருமணத்துக்காக மீண்டும் சேமித்த பணம் அனைத்தையும் செலவிடுகிறார். கல்லூரியை முடிக்கும் சித்தார்த்துக்கு சரியான வேலை கிடைக்காமல் இருக்கிறது.

சரத்குமாரின் சொந்த வீடு கனவு, மகனின் கனவாக மாறினாலும் தந்தையின் கனவான சொந்த வீடு கனவை மகன் சித்தார்த் நிறைவேற்றினாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான்   ’3 பி.ஹெச்.கே’.

வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார், அழுத்தமான கதாபாத்திரத்தில்  அனுபவ நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் 

சரத்குமாரின் மகனாக நடித்திருக்கும் சித்தார்த் நடிப்பில் பல பரிமாணங்களில் நடுத்தர குடும்பத்தில் வாழும் இளைஞராக இயல்பான நடிப்பில் பாராட்டும்படி நடிக்கிறார் . 

சரத்குமாரின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி, சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், சித்தார்த்தின் தோழியாக நடித்திருக்கும் சைத்ரா , யோகி பாபு என நடித்தவர்கள் அனைவரும் திரைக்கதைக்கு பக்க பலம் .

அம்ரித் ராம்நாத் இசையும் , ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவும்  படத்திற்கு பக்க பலம் .

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இத்திரைப்படத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் படும் கஷ்டத்தையும், வேதனையையும் அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

 

ரேட்டிங் – 3  / 5