Take a fresh look at your lifestyle.

‘பீனிக்ஸ்’ – விமர்சனம்

105

ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலட்சுமி அனல் அரசு தயாரிப்பில் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், மூனார் ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பீனிக்ஸ்’

எம் எல் ஏ-வாக இருக்கும் சம்பத்தை கொடூரமாக கொலை செய்கிறார் சூர்யா சேதுபதி 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் சீர்த்திருத்த சிறையில் அடைக்கிறார்கள். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார் போலீஸ் உயர் அதிகாரியான ஹரீஷ் உத்தமன்

இந்நிலையில் எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்‌ஷ்மி சரத்குமார், தனது ஆட்களை சிறைக்குள் அனுப்பி சூர்யாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். அவர்களது திட்டத்தை தகர்த்தெரிகிறார் சூர்யா விஜய்சேதுபதி.

சூர்யா விஜய்சேதுபதியின்   அதிரடி ஆட்டத்தை  பார்த்து  அதிர்ச்சியாகும் வரலட்சுமி சரத்குமாரின் அடியாட்கள் அவரை கொலை செய்ய தொடர்ந்து கொன்று பழி தீர்க்க துடிக்கின்றனர்.  

முடிவில் சூர்யா விஜய்  சேதுபதி வரலட்சுமி சரத்குமாரின் கொலை திட்டத்தை முறியடித்தாரா? இல்லையா?     என்பதை சொல்லும் படம்தான் ‘பீனிக்ஸ்’.

நாயகனாக நடித்திருக்கும் சூர்யா விஜய்சேதுபதி, அறிமுக நாயகனாக முதல் படத்திலேயே ஆக்‌ஷன் ஹீரோவாக கதாபாத்திரத்துடன்  இணைந்து படம் முழுவதும் உடல் மொழியில் அதிரடி நாயகனாக ஆக்‌ஷன் காட்சிகளில் ரசிகர்களின் மத்தியில் கை தட்டலை பெறுகிறார் .

 வில்லனாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், எம்.எல்.ஏ மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் அம்மாவாக தேவதர்ஷினி, நாயகனின் அண்ணனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என நடித்தவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் . 

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையும் படத்திற்கு பக்க பலம் . 

பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து  ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக முழுக்க  ஆக்‌ஷன் காட்சிகளுடன் அனல் பறக்கும் அதிரடி  ஆக்‌ஷன்  படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்  ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு

ரேட்டிங் – 3 / 5