Take a fresh look at your lifestyle.

‘பறந்து போ’ – விமர்சனம்

104

ஜியோஹாட்ஸ்டார், ஜி.கே.எஸ் பிரோஸ் புரொடக்‌ஷன்ஸ் – ராம், வி.குணசேகரன், வி.கருப்புசாமி, வி.சங்கர், சஜித் சிவானந்தம், கே.மாதவன் தயாரிப்பில்  ராம் இயக்கத்தில்  மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான், அஞ்சலி, பாலாஜி சக்திவேல், அஜு வர்கீஸ், ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பறந்து போ’

சென்னை உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மிர்ச்சி சிவா இவரது மனைவி கிரேஸ் ஆண்டனி மற்றும் மகன் மிதுன் ரியானுடன் வாழ்ந்து வருகிறார். கடை ஒன்றை வைக்க என்று ஆசைப்படும் சிவா வீடு  வீடாக பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.

துணிக்கடை வைத்திருக்கும் கிரேஸ் ஆண்டனி வேலை விஷயமாக கோயம்புத்தூர் செல்கிறார். மகனுக்கு கோடை விடுமுறை என்பதால் மகனை சிவா பார்த்து கொள்கிறார்.மகனுக்கு தேவையான அனைத்தையும் தன் சக்திக்கு மீறி செய்து கொடுக்கிறார். ஆனால் மகனோ குறும்பு செய்வதே வேலையாக வைத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் துணிக்கடை விஷயமாக கோயம்புத்தூர் சென்றிருக்கும் கிரேஸ் ஆண்டனி அவனை வண்டியில் ஊரை சுற்றி பார்க்க அழைத்து செல்லும்படி மிர்ச்சி சிவாவிடம் சொல்ல, அவரும் தன் மகனை வண்டியில் அழைத்து செல்லும்போது மிதுன் ரியான் வழியில் சந்திக்கும் மனிதர்களையும் அவனிடம் மனம் விட்டு பேசும் நண்பர்களையும் அவன் உணரும் இயற்கையான சுழலையும் கண்டு நாம் அனைவரும் இங்கேயே வாழ்ந்து விடலாம் என அடம் பிடிக்க இறுதியில் பெற்றோர்களான மிர்ச்சி சிவாவும் ,கிரேஸ் ஆண்டனிவும் அவனுக்காக என்ன முடிவு எடுத்தார்கள்? என்பதை சொல்லும் படம்தான் ‘பறந்து போ’

நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா எதார்த்தமான நடிப்பின் முலம் கவனம் பெறுகிறார். உடல் மொழி மற்றும் டைமிங் காமெடி மூலம் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும்  வைக்கிறார்.

சிவாவின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள வரவான கிரேஸ் ஆண்டனி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.சிவாவின் மகனாக நடித்திருக்கும் மித்துல் ரியான் செய்யும் குறும்புகள் ரசிக்கவும் ,சிரிக்கவும் வைக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ்,விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம் என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு அழகு

குழந்தைகளுக்கு சந்தோசம் எங்கு கிடைக்கிறது என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராம், முதல் முறையாக நகைச்சுவை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் – 3.5 / 5