’மர்மர் ’ – விமர்சனம்

எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் association with ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்’ மர்மர் ’

திருவண்ணாமலை மாவட்டம் காத்தூர் கிராமத்தில் உள்ள ஜவ்வாது மலையில் 7 கன்னிகளும் ஒரு சூனியக்காரி இருப்பதாக அக்கிராம மக்கள் நம்புகின்றனர்.

7 கன்னிகள் மற்றும் 1 சூனியக்காரியைப் பற்றி தெரிந்து அதனை ஆவணப்படமாக எடுப்பதற்கு அந்த காட்டிற்குள் செல்ல ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், அரியா செல்வராஜ் ஆகியோர் காட்டுக்கு செல்ல முடிவு எடுக்கிறார்கள்.

இவர்களின் உதவிக்காக காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த யுவிகா ராஜேந்திரன்என்ற பெண்ணும் இவர்களோடு அந்த காட்டிற்குள் செல்கின்றார். ஒரு இடத்தில் டெண்ட் அமைத்து ஐவரும் அங்கு தங்குகின்றனர்.

நடு இரவில் இளம்பெண் யுவிகா ராஜேந்திரனை அமானுஷ்ய சக்தி கொலை செய்து விடுகிறது. 

முடிவில் அந்த அமானுஷய சக்தியிடமிருந்து ஆவணப்படம்  எடுப்பதற்கு காட்டில் தங்கியுள்ள   நான்கு பேரும்  உயிரோடு அதன் பிடியிலிருந்து  தப்பித்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்   ’மர்மர் ’
ரிஷி கதாபாத்திரத்தில் ரிச்சி கபூர், மெல்வின் கதாபாத்திரத்தில் தேவ்ராஜ் ஆறுமுகம்,அங்கிதாவாக வரும் சுகன்யா ஷண்முகம்,காந்தாவாக நடித்திருக்கும் யுவிகா ராஜேந்திரன்,ஜெனிபர் வேடமேற்றிருக்கும் அரியா செல்வராஜ் நடித்த இவர்கள் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .
இந்தப்படத்துக்கு இசையமைப்பாளரே இல்லாததால் ரசிகர்களை பயத்தில் அலற வைக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் ஒலி வடிவமைப்பாளர் கெவய்ன் பிரடெரிக்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் காடுகளையும் இரவு நேர காட்சிகளையும் அழகாகவும் மிரட்டலாகவும் படமாக்கியிருக்கிறார்.
இதுவரை தமிழில் வந்த திகில் படங்கள் போல் இல்லாமல் அடர்ந்த காட்டு பகுதியில் இத்திரைப்படத்தை திகிலுடன் படம் பார்பவர்கள் அலறும் ஒலி யுடன்  படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹேம்நாத் நாராயணன்.  
ரேட்டிங் : 3 / 5
Comments (0)
Add Comment