‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ – விமர்சனம்

Casting : Pavish Narayan, Anikha Surendran, Mathew Thomas, Priya P Varrier, Venkatesh Menon, Ramya Ranganathan, Siddhartha Shankar, Rabiya Khatoon, R Sarath Kumar, Saranya Ponvannan, ‘Aadukalam’ Naren, Uday Mahesh, Sridevi

Directed By : Dhanush

Music By : GV Prakash Kumar

Produced By : Wunderbar Films Pvt Ltd – Kasthoori Raja & Vijayalakshmi Kasthoori Raja

ஆடுகளம் நரேன் – சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளின் மகன் நாயகன் பவிஷ் நாராயண் ஒரு ஹோட்டலில் செஃப் ஆக வேலை பார்த்து வருகிறார். காதல் தோல்வியால் எப்பொழுதும் சோகமாக இருக்கிறார். இதனையடுத்து பவிஷ் பெற்றோர்கள் பிரியா வாரியரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்க்க செல்கிறார்கள்.

நேரில் சென்று பார்த்த பிறகு தான் பவிஷ் தான் பார்க்க வந்த பெண் பிரியா வாரியர் தன்னுடைய பள்ளியில் உடன் படித்த தோழி என்று. இதனைத் தொடர்ந்து இருவரும் பேசிப் பழகி ஆறு மாதத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்கிறார்கள்.

இந்நிலையில் திடீர் என முன்னாள் காதலியான அனிகா சுரேந்திரனிடம் இருந்து திருமண அழைப்பிதழ் வருகிறது. இதனையடுத்து அனிகா சுரேந்திரன் திருமணத்திற்கு செல்ல பவிஷ் முடிவு செய்கிறான்.

முடிவில் முன்னாள் காதலி அனிகா சுரேந்திரன் திருமணத்திற்கு செல்வது போல், பிரிந்து சென்ற காதலியை பார்க்க செல்லும் பவிஷ், பழைய காதலியுடன் இணைகிறாரா? அல்லது நாயகன் பவிஷ் பெற்றோர் பார்த்த பெண்ணான பிரியா வாரியரை திருமணம் செய்து கொண்டாரா? என்பதை சொல்லும் படம்தான் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’
நாயகனாக நடித்திருக்கும் பவிஷ் அறிமுக நடிகரை போல இல்லாமல் துடி துடிப்பான இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல்,ரொமான்ஸ்,காமெடி,நடனம் என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை கவர்கிறார்.

காதலியாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் மணப்பெண்ணாக வரும் பிரியாவாரியர் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
மலையாள நடிகர் மேத்யூஸ் தாமஸ் வருகிற காட்சிகள் கலகலப்பாக நகர்கிறது.

அனிகாசுரேந்திரன் அப்பாவாக வரும் சரத்குமார்,ஆடுகளம் நரேன்,சரண்யா பொன்வண்ணன் ஒரு பாடலுக்கு வரும் பிரியங்கா மோகன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்து கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

காதல் தோல்வி , திருமணம் , நட்பு, குடும்பம், காமெடி இவை அனைத்தையும் மையமாக வைத்து நகைச்சுவை கலந்து ஒரு கலகலப்பான 2k இளைஞர்களை நிச்சயம் கவரும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் தனுஷ்

ரேட்டிங் : 3 / 5

நடிகர்கள் : பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், ப்ரியா வாரியர்,
இசை : ஜிவி பிரகாஷ் குமார்
இயக்கம் : தனுஷ்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது

 

Comments (0)
Add Comment