கும்கி 2 திரைவிமர்சனம்
பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கும்கி திரைப்படம் வெளியானது. விக்ரம் பிரபு இப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் கும்கி 2 வெளியாகியுள்ளது. மதியழகன் , அர்ஜூன் தாஸ் , ஶ்ரீதா ராவ் , ஹரிஷ் பேரடி சூஸன் ஜார்ஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்
கதை
காட்டில் பள்ளத்தில் சிக்கிய யானைக் குட்டியை நாயகன் மதி காப்பாற்றுகிறார். அதன்பின் மதியை அந்த யானை குட்டி விடாமல் துரத்துகிறது. இருவருக்கும் இடையில் நல்ல உறவு ஏற்பட இருவரும் இணைந்து பயணிக்கின்றனர். குட்டி யானை பெரிய யானையாக மாற நாயகனும் பெரியவனாகிறார். இருவருக்குமான உறவு அதிகமாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் திடீரென்று யானை காணாமல் போகிறது. எங்கு தேடி அலைந்தும் யானை கிடைக்கவில்லை. வறுத்தத்துடன் இருக்கும் சூழ்நிலையில் தனது ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நாயகன் வெளி ஊருக்கு படிக்கச் செல்கிறான். ஐந்து ஆண்டுகள் படிப்பை முடித்து நாயகன் மதி திரும்பி வரும் போது அவனது காணாமல்போன யானையைப் பற்றிய தகவல் கிடைக்கவே மறுபடியும் அதை தேடி செல்கிறான். யானை காணாமல் போனதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன ? யானையை நாயகன் மதி கண்டுபிடித்தானா? இல்லையா? என்பதே கும்கி 2 படத்தின் மீதிக்கதை
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மதி நன்றாகவே நடித்துள்ளார். நல்ல எதிர்காலம் இருக்கு. நாயகியாக வரும் ஸ்ரிதா ராவ் ஒரிரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பும் அருமை. ஹரிஷ் பேரடி, ஆண்ட்ரூஸ், ஆகாஷ்,
ஸ்ரீநாத், சூஸன் ஜார்ஜ், ஶ்ரீதா ராவ் ,
என இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் பிரபு சாலமன்
யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சொல்லியிருக்கிறார். இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பார்ட்டுக்கள்.