‘’பணி’’ விமர்சனம்

ரசிகர்களின் பாராட்டுதலில் மிரட்டலான திரைக்கதை

கேரளாவில் உள்ள திருச்சூரில் மிக பெரிய தொழிலதிபர் என்ற முகத்துடன் 

தாதாவாக தன் காதல் மனைவி அபிநயா ஆனந்தத்துடன் சந்தோஷமாக 

வாழ்கிறார்  நாயகன் ஜோஜு ஜார்ஜ்  

 

 

ஜோஜு ஜார்ஜிக்கு தன்னுடன் பிரசாந்த் அலெக்சாண்டர் மற்றும் கேரள வர்மா 

கல்லூரியைச் சேர்ந்த மூன்று நண்பர்களுடன் கேரள மாநில போலீசே 

பயப்படும் வகையில் ஜோஜு ஜார்ஜ் குழுவினர் தாதாக்களாக திருச்சூரில் வலம் 

வருகின்றனர் .  இந்நிலையில் இரு சக்கர வண்டிகளை பழுது பார்க்கும் மெக்கானிக்குகளாக 

இருக்கும்  சாகர் சூர்யா, ஜூனைஸ் வி.பி இருவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு முதல்முறையாக கூலிப்படையாக மாறி பட்டப்பகலில் ஜன நடமாட்டம்

அதிகம் உள்ள திருச்சூர் நகரின் மையப்பகுதியில் ஒருவரைத் திட்டமிட்டு 

கொலை செய்கிறார்கள். 

திருச்சூர் நகரை பட்டப்பகலில் உலுக்கிய இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் ஜோஜு ஜார்ஜின் மனைவியான 

அபிநயாஆனந்தத்துடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஜோஜு ஜார்ஜிடம் 

இருவரும் அடி வாங்குகிறார்கள். 

 

பல பேர் முன்னிலையில் தங்களை அடித்து அவமானப்படுத்திய  ஜோஜு ஜார்ஜியையும் அவரது குடும்பத்தையும் பழிவாங்க ஆரம்பிக்கிறார்கள். 

 

இதில் முதல் கட்டமாக ஜோஜு ஜார்ஜின் மனைவி அபிநயாஆனந்த்தை அவரது வீட்டில் மானபங்கம் செய்ய,,,,ஆத்திரமடைந்த ஜோஜு ஜார்ஜ் அவர்கள் 

இருவரையும் தேடும்முயற்சியில் ஈடுபடும்போதுவெறியடைந்த  கொலையாளிகள் ஜோஜு ஜார்ஜின் நண்பனை கொல்வதுடன் .அவருடன் 

நெருக்கமாக இருக்கும் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக 

கொல்வதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர் .

முடிவில் கொலைகார அந்த  இரண்டு இளைஞர்கள்  ஜோஜு ஜார்ஜ் பிடியில் சிக்கினார்களா?

இறுதியில் ஜோஜு ஜார்ஜ் அவர்களை   பழிவாங்கிய விதம் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘’பணி’’

 

கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ஜோஜூ ஜார்ஜின் நடிப்பு அமைதியான 

மிரட்டலில் உடல் மொழியில் ஆர்ப்பாட்டமில்லாத அதிரடி ஆக்‌ஷன் 

நாயகனாக  இயல்பான நடிப்பில் ஜொலிக்கிறார் .

எதார்த்த நடிப்பில் ஜோஜு ஜார்ஜின் மனைவியாக அபிநயாஆனந்த்

 படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வில்லன்களாக நடிப்பில் பயமுறுத்தும் சாகர் சூர்யா & ஜூனைஸ் வி.பி ,சீமா ஐ வி சசி,பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர்,பாபி குரியன்,ரஞ்சித் வேலாயுதன்,சாந்தினி ஸ்ரீதரன்,

அபாயா ஹிரண்மயி,சோனா மரியா ஆபிரகாம்,லங்கா லக்ஷ்மி,

பிரிட்டோ டேவிஸ்,ஜெயசங்கர்,அஷ்ரப் மல்லிசேரி.டாக்டர் மெர்லட் ஆன் 

தாமஸ் என நடித்த நடிகர்கள் அனைவருமே திரைக்கதைக்கு பக்க பலமாக 

நடிப்பில் போட்டி போடுகின்றனர். 

 

Comments (0)
Add Comment