செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘ ராக் ஸ்டார் ‘அனிரூத் வெளியிட்ட ‘ராவடி’ படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் & கேரக்டர் கிளிம்ப்ஸ்

நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ ராவடி ‘ எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ராவடி’ எனும் திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை இசையமைப்பாளர் ‘ராக் ஸ்டார்’ அனிருத் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார்- ஜாபர் – நோபல்- அருணாசலம் – ஆகியோரின் தோற்றங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இப்படம்- எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

Link : https://youtu.be/XFkH5Z-ZtCk

#actor akshay kumar#celebrity events#First look#New film#raawdi movie#Tamil movie#title launch#ungal cinemacinema news
Comments (0)
Add Comment