வாழை மாரி செல்வராஜ் வாழ்க்கை படமான வாழைக்கு உணர்வும் உயிரும் அழகாக வெளிப்படுத்திய இயக்குனருக்கு தேசிய விருதுகளால் அழகு பார்ப்பது சிறப்பு…
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன் சார்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலையரசன், நிகிலா விமல், பொன்வேல், ராகுல், ஜானகி, திவ்யா துரைசாமி, பத்மன், ஜே. சதீஷ்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து தாய் ஜானகி மற்றும் அக்கா திவ்யா துரைசாமியுடன் வளர்ந்து வருகிறான் பொன்வேல்.
பள்ளியில் படிக்கும் பொன் வேலுக்கு நெருங்கிய நண்பன் சேகர். பள்ளி விடுமுறை நாட்களில் அம்மா மற்றும் அக்காவுடன் சேர்ந்து வாழைத்தார்கள் சுமந்து செல்லும் வேலைக்கு அம்மாவின் கட்டாயத்தின் பேரில் செல்கிறான். ஆனால் அவனுக்கு அந்த வேலை செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை.
இந்த வேலைக்கு போகாமல் எப்படி நிம்மதியாக இருக்கலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான் பொன்வேல்.
பொன்வேலின் அஜாக்கிரதையால் ஒரு ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட அவன் அம்மாவிடம் இனி எல்லா விடுமுறை நாட்களிலும் கண்டிப்பாக வாழைத்தார்களை சுமக்கும் வேலைக்கு வருகிறேன் என்று சத்தியம் செய்கிறான்.
அப்படி ஒரு நாள் வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு தனது அக்கா மற்றும் ஊர் மக்களுடன் லாரியில் போகும் சிறுவன் பொன்வேல், சட்டென்று பாதியில் லாரியில் இருந்து இறங்கி விடுகிறான்.
அவன் இறங்கிய பின் தொடர்ந்து செல்கிறது லாரி, அதில் பயணம் செய்யும் மக்களுக்கு மிகப்பெரிய துயரம் ஏற்படுகிறது. அந்த துயரம் என்ன?அதனால் பொன்வேலுக்கு ஏற்படும் பிரச்சனை என்ன? அவன் அனுபவித்த வலிகள் என்ன என்பதை கனத்த இதயத்தோடு சொல்லி இருப்பதே வாழை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : மாரி செல்வராஜ்
பேனர் : டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்
ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியீடு
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ்
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
கலை இயக்குனர் : குமார் கங்கப்பன்
எடிட்டர் : சூரிய பிரதமன்
அதிரடி நடனம் : திலிப் சுப்பராயன்
நடனம் : சாண்டி
ஒலிப்பதிவு : சுரேன்
ஒலி வடிவமைப்பாளர் : சுரேன்.ஜி, அழகியகூத்தன்.எஸ்
ஆடை வடிவமைப்பாளர் : ஸ்ரீ ஸ்வர்ணா
ஆடை அணிந்தவர் : டி.ரவி
ஒப்பனை : ஆர்.கணபதி
ஸ்டில்ஸ் : ஜெயக்குமார் வைரவன்
விளம்பர வடிவமைப்பாளர் : கபிலன்
VFX : ஹரிஹர சுதன்
DI வண்ணக்கலைஞர் : பிரசாத் சோமசேகர்
டிஐ லைன் தயாரிப்பாளர் : எம்.எல்.விஜயகுமார்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
நிர்வாக தயாரிப்பாளர் : வெங்கட் ஆறுமுகம்