‘என்ஜாய்’ சினிமா விமர்சனம்

உடுத்தும் உடை.. வைத்திருக்கும் செல்போன்.. இவற்றில் எல்லாம் பாகுபாடு பார்ப்பதால் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றனர் கல்லூரி மாணவிகள். இதனால் தடம் மாறி பார்ட் டைம் விபச்சாரத்திற்கு செல்கின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் ஒன்லைன்..

பலான சப்ஜெக்டில் சமூகத்துக்கு பாடம் நடத்துகிற முயற்சியாக ‘என்ஜாய்.’

கல்லூரியில் படிக்கிற, ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மூன்று பெண்களை சக மாணவிகளில் சிலர் தங்களது பணக்காரத்தனத்தால் மனம் நோகச் செய்கிறார்கள்.

அந்த மூவர் மீதும் அக்கறை செலுத்துகிற ஒரு சிநேகிதி அவர்களுக்கு பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறார்.
அந்த எக்குத்தப்பான வழி தரும் வலியும், அதிலிருந்து மீள்வதற்கான அவர்களின் போராட்டமுமே கதை!

காட்சிகளில் வசனங்களில் கவர்ச்சி, கிளுகிளுப்பு, ஆபாசம், அருவருப்பு என எதற்கும் பஞ்சமில்லை. அதற்கேற்ப வளைந்து கொடுத்திருக்கும் நடிகர் நடிகைகளின் பங்களிப்பில் குறையில்லை!

‘வீக் என்ட் பார்ட்டி’ என்ற பெயரில் நடக்கும் உயர்ரக விபச்சாரம், பணத்துக்கு ஆசைப்படும் இளம் பெண்களின் வீக்னஸை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்பதை எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வூட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் பெருமாள் காசி. அந்த முயற்சி ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ரக வரிசையில்

Comments (0)
Add Comment