ஏ. கே. குமார் இயக்கத்தில் ஜனனி, விசாகன், கௌசிக், ரமேஷ்கண்ணா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் நிழல்.
கதை
ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார் ஜனனி, அவருக்கு ஒரு தங்கை. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனனியின் காதலர். நடுத்தரக் குடும்பம். ஒருநாள் காதலருடன் வெளியில் செல்வதற்காக, தன்னைப் போலவே இருக்கும் தங்கையை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கிறார்.மருத்துவனையில் முதலாளியின் மகன் அவரது நண்பர்களுடன் ஒரு பெணணை பாலியியல் பலாத்காரம் செய்வதை பார்த்துவிட அவர்கள் இவர் பார்த்ததை பார்த்துவிட எதிர்பாராத சூழலில் அவர் தாக்கப்படுகிறார். அதனால் ஏற்படும் விளைவுகள் ஜனனியை நிழலாகத் தொடர்கின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார், பெண்களை பாலியல் செய்யும் அவர்களுக்கு அளிக்கும் தண்டனை என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பிக்பாஸ் ஜனனி கதாநாயகியாக இரட்டை வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.
ஜனனியின் தந்தையாக ரமேஷ்கண்ணா சிறப்பாக நடித்துள்ளார்.
கதாநாயகர்களாக விசாகன், கெளசிக். சிறப்பாக நடித்துள்ளனர். திவ்யா கிருஷ்ணன், அபிஷேக் சங்கர், சபிதா ஆனந்த், பாய்ஸ் ராஜன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். அபுபக்கரின்
இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் மோகன்குமார் பழனிவேலுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களே பழிவாங்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதை எல்லோரும் ரசிக்கும்படியாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஏ.கே. குமார். வாழ்த்துக்கள்.