ஹீ-மேன் திரை விமர்சனம்

இயக்குனர் டிராவிஸ் நைட் இயக்கத்தில் உருவாகி, உலகம் முழுவதும் ஜூன் 5, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ். நிக்கோலஸ் கலிட்சின் ‘ஹீ-மேன்’ ஆகவும், ஜாரெட் லெட்டோ வில்லன் ‘ஸ்கெலிட்டார்’ ஆகவும் நடித்துள்ளனர்

கதை

எட்டர்னியாவின் முன்னாள் இளவரசனான ஆடம் (நிக்கோலஸ் கலிட்சின்), தன் தாயின் சொந்த கோளான பூமியில் 15 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, தன் தந்தையின் கோளத்திற்குத் திரும்புகிறான். அங்கே அவனது உலகம் தரைமட்டமாகி, கொடூர மந்திரவாதியான ஸ்கெலிட்டாரின் பிடியில் சிக்கியிருப்பதை அறிகிறான். தன் குடும்பத்தின் மரபுரிமையை மீட்டெடுக்கவும், பிரபஞ்சத்தைக் காக்கவும் அவன் மேற்கொள்ளும் சாகசமே இந்தப்படத்தின் கதை.

ஹீ-மேனாக நடித்துள்ள நிக்கோலஸ் கலிட்சின் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து சிறப்பாக நடித்துள்ளார். ஸ்கெலிட்டராக வரும் ஜாரெட் லெட்டோவின் நடிப்பு மற்றும் மிரட்டலான தோற்றம் படத்திற்குப் பலம்.தமிழில் ஹீ-மேன் கதாபாத்திரத்திற்குப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கார்த்திக் குரல் கொடுத்துள்ளார். ஆதித்யா மேனன் ஸ்கெலட்டருக்கும், அர்ஜுன் சர்ஜா டங்கனுக்கும் குரல் கொடுத்துள்ளனர்.விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX): படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் பின்னணி இசை மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது.

பிளஸ் (பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அட்டகாசமான விஎஃப்எக்ஸ் (VFX).குழந்தை பருவ ஏக்கத்தைத் தூண்டும் வகையிலான எட்டர்னியா உலகக் காட்சிகள்.இடையிடையே வரும் நகைச்சுவை மற்றும் கார்த்தியின் சிறந்த தமிழ் டப்பிங்.

90-களில் வெளியான கார்ட்டூன் தொடரின் ஏக்கம், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் பிரம்மாண்ட விஎஃப்எக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சுவாரஸ்யமான குடும்பத் திரைப்படமாக இது அமைந்துள்ளது
பார்க்கலாம்.

Comments (0)
Add Comment