பெத்தி திரைவிமர்சனம்

பெத்தி திரைவிமர்சனம்

புச்சி பாபு சனா இயக்கத்தில்
ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘பெத்தி’

கதை

ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டு பதக்கங்களை மட்டுமே வென்றதால், மத்திய அமைச்சர் அதிகாரிகளையும் தேர்வாளர்களையும் கடுமையாகத் திட்டுகிறார். நல்ல வீரர்களை உருவாக்க வேண்டும் என எச்சரிக்கிறார். இதனால், விளையாட்டுத் தேர்வாளர் (போமன் இரானி) ஊர் ஊராகச் சென்று வீரர்களைத் தேடுகிறார். விஜயநகரம் அருகே யாரிடம் கேட்டாலும் பெத்தியின் பெயரைச் சொல்கிறார்கள். அதனால், பெத்தியைப் பற்றி தெரிந்துகொள்ள அவர் விரும்புகிறார்.
விஜயநகரம் காட்டுப் பகுதிக்கு அருகே உள்ள ஒரு மலைக்கிராமத்தில் ‘பெத்தி’ (ராம் சரண்) மிகவும் பிரபலமானவர். எந்த விளையாட்டு என்றாலும், அங்கு பெத்தியின் பெயர்தான் ஒலிக்கும்.
பெத்தி ஒரு கிரிக்கெட் கூலி ஆட்டக்காரர். எந்த அணி அதிக பணம் தருகிறதோ, அந்த அணிக்காக விளையாடுவார். உள்ளூரில் பொப்பிலி மற்றும் விஜயநகரம் அணிகள் கிரிக்கெட் விளையாடும். பெத்தியை அதிக விலைக்கு வாங்குகிறார்கள். பெத்தி எந்த அணியில் இருக்கிறாரோ, அந்த அணிதான் ஜெயிக்கும். ஆனால் ஒருமுறை, கிரிக்கெட்டில் பெத்தியை ‘கூலிக்காரன்’ என்று இரண்டு அணிகளும் அவமானப்படுத்துகின்றன. கிரிக்கெட் மைதானத்தில் பெத்தியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த கௌர்நாயுடு (சிவராஜ்குமார்), அவரைத் தங்கள் மல்யுத்தப் போட்டிக்கு அழைக்கிறார்.
சாதி மற்றும் பகுதி பெயரால் தனக்கு நடந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், பெத்தி மல்யுத்தப் போட்டிக்குத் தயாராகிறார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தனது மலைக்கிராமம். சாலை, போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். தங்கள் ஊருக்கு அங்கீகாரம் கிடைக்கவும், ரயில் நிலையம் வரவும் கடந்த முப்பது ஆண்டுகளாக அப்பிராஜு (ஜெகபதி பாபு) பார்க்காத அதிகாரி இல்லை, சந்திக்காத தலைவர் இல்லை. ஆனால், அங்கே ரயில் நிற்கவில்லை. ஒரு எம்.எல்.ஏ-விடம் அவருக்குக் கொடூரமான அவமானம் ஏற்படுகிறது. இதனால், ரயில் தண்டவாளத்தில் விழுந்து உயிரை விடுகிறார். அப்பிராஜுவுக்காகவும், தங்கள் ஊரின் அங்கீகாரத்திற்காகவும், ஊருக்கு ரயில் கொண்டு வரவும் பெத்தி என்ன செய்தார்? மல்யுத்தத்தில் தேசிய சாம்பியன் ஆனாரா? மல்யுத்தத்தில் இருந்து ஏன் ஓட்டப்பந்தயத்திற்கு மாறினார்? அவருக்கு எதிராக நடந்த சதி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை

ராம் சரண் கிரிக்கெட் வீரராக, குஸ்தி விளையாடடு வீரராக, ஓட்டப்பந்தயத்து வீரராக என தன் நடிப்பால் மிரட்டியுள்ளார். நடனத்திலும் சண்டைக்காட்களிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக
ஜான்வி கபூர் நடிப்பாலும் கவர்ச்சியாலும் ரசிக்கவைக்கிறார்.அப்பிராஜுவாக ஜெகபதி பாபுவுக்கு மற்றுமொரு சிறந்த கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
கௌர்நாயுடுவாக சிவராஜ்குமார் பவர்ஃபுல் ரோலில் மிரட்டியுள்ளார். போமன் இரானி பாத்திரம் ஓகே ரகம். ஸ்ருதி ஹாசன் ஒரு சிறப்பு பாடலுக்கு ஆடியுள்ளார். அருமை. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அருமை. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

ஸ்போர்ட்ஸ் பின்னணியில் நடக்கும் எமோஷனல் டிராமா. தங்கள் ஊரின் அங்கீகாரத்திற்காக ஒரு விளையாட்டு வீரன் நடத்தும் போராட்டம் என்ற கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாகசொல்லியுள்ளார் இயக்குநர் புச்சி பாபு சனா. பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3.5/5

Comments (0)
Add Comment