பரிமளா & கோ திரைவிமர்சனம்

பரிமளா & கோ திரைவிமர்சனம்

லைக்கா சுபாஸ்கரன், தமிழ்க்குமரன் பசங்க பாண்டிராஜ் மூவர் தயாரிப்பில்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், தமிழ்க்குமரன், சாண்டி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பரிமளா & கோ.

கதை

ஜெயராம் தன் மனைவி ஊர்வசி, இரண்டு மகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஜெயராமின் இரண்டாவது மகளை சாண்டி லவ் டார்ச்சர் கொடுக்கிறார். இவரது லவ் டார்ச்சரால் ஜெயராம் குடும்பம் வேதனை படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் சாண்டி கொலைசெய்யப்படுகிறார். சாண்டியை கொலை செய்தது ஜெயராம் குடும்பமா? அல்லது வேறு நபர்களா? என்று இன்ஸ்பெக்டர் மிஷ்கினும் உதவி ஆய்வாளர் தயாரிபபாளர் தமிழ்க்குமரனும் கண்டுபிடிப்தே படத்தின் மீதிக்கதை.

குடும்பத்தலைவனாக ஜெயராம் தன் மகள்கள் மனைவி சாண்டியை கொலை செய்திருப்பார்களோ என்ற கோணத்தில் தன் நடிப்பை காமெடியுடன் சிறப்பாக செய்துள்ளார். ஜெயராம் மனைவியாக ஊர்வசி காமெடியடன் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கலக்குகிறார். இன்ஸ்பெக்டராக மிஷ்கின் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். உதவி ஆய்வாளராக தமிழ்க்குமரன் சிறப்பாக நடித்துள்ளார். வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும். நடிப்பிலும் நல்ல எதிர்காலம் இருக்கு. ஹவுஸ் ஓனராக யோகி பாபு சிரிக்கவைக்கிறார். ரவுடியாக சாண்டி மாஸ்டர் நடிப்பும் அருமை.சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆனந்திகா சனில்குமார், சிங்கம்புலி, பகவதிபெருமாள் காயத்ரி, சென்ட்ராயன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஜ்ர்ஜ் C வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

வழக்கமான பாண்டிராஜ் படங்களை விட வித்தியாசமாக, ஆரம்பம் முதல் இறுதி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியுடன், யூகிக்க முடியாத பல சஸ்பென்ஸ் திருப்பங்களையும் சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். வாழ்த்துக்கள்.

#New film#new release #movie review#parimala and co movie#Tamil movie#ungal cinemacinema news
Comments (0)
Add Comment