பாபு விஜய் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகிபாபு, ராமச்சந்திரா ராஜு,ஆதித்யா கதிர்,சத்யன், Sriman மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சட்டென்று மாறுது வானிலை.
கதை
ஐடியில் வேலை செய்யும் நாயகன் (ஜெய்) அப்பா அமைச்சரின் செயல் பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறிய நாயகி (மீனாட்சி கோவிந்தராஜன்) விடுதியில் தங்கியிருக்கிறாள். மீனாட்சியை சில இடங்களில் சந்தித்த ஜெய் அவர்மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து திடீரென்று திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் நிதி நெருக்கடியில் ரவுடியிடம் யோகிபாபு ரெக்கமண்டேஷனில் கடனாக பணம் வாங்கி குடும்பம் நடத்துகிறார். மீனாட்சி பாய்பிரண்ட் இவரின் சொத்துக்காக இவரை ஜெய்யிடமிருந்து பிரித்து திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். ஜெய் மனைவியுடன் ஹனிமூனுக்கு வந்து காட்டேஜில் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து அதை லைவ்வாக பார்க்கிறார் காட்டேஜ் ஓனரான ராமச்சந்திரா ராஜு, ஜெய்யை போன்ற வந்த பல தம்பதிகளையும் வீடியோவா எடுத்து அதை வியாபாரமாக பார்க்கிறார் ராமச்சந்திரா ராஜு,. மினிஸ்டரான அப்பா மகளான மீனாட்சியை தேடுகிறார். இதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக ஜெய் வழக்கம் போல் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பாலும் அழகாலும் கவர்கிறார்.யோகி பாபுவின் நகைச்சுவை பரவாயில்லை ரகம். ராமச்சந்திரா ராஜு, மிரட்டலான வில்லத்தனம் படத்திற்கு கூடுதல் பலம்.
ஆதித்யா கதிர், சத்யன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் பரவாயில்லை ரகம். ரிச்சார்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குநர் பாபு விஜய் எடுத்துக்கொண்ட காதல் கதையை திரைக்கதையின் மூலம் இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.